Asianet News TamilAsianet News Tamil

உடலுறவு குறித்து முதல்வர் நிதிஷ்குமார் சர்ச்சை பேச்சு.. வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள் எங்க போனீங்க.. பாஜக.!

திராவிட முன்னேற்ற கழகம் நிதிஷ் குமார் பேசியதை ஆதரிக்கிறதா? மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலையில், பெண்களை இழிவாக பேசியுள்ள I.N.D.I கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைப்பாரா மு.க.ஸ்டாலின் அவர்கள்?

Chief Minister Nitish Kumar talk about women is strongly condemned... narayanan thirupathy tvk
Author
First Published Nov 9, 2023, 9:36 AM IST | Last Updated Nov 9, 2023, 9:36 AM IST

பீகார் சட்டசபையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பெண்கள் குறித்து பேசியது கடும் கண்டனத்திற்குரியது என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

பீகார் சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில், சாதி வாரியான கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், பீகாரில் கருத்தரித்தல் விகிதம் 4.3 சதவிகிதத்தில் இருந்து 2. 9 சதவிகிதமாக குறைந்துள்ளது. விரைவில் அது 2ஆக குறையும் என்றார். மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு இளம் தலைமுறை பெண்களிடம் பாலியல் குறித்த விழிப்புணர்வு இருப்பதே காரணம். கணவனின் செயல்கள் அதிக பிறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கின்றன. கல்வியறிவு பெற்ற பெண் இதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை நன்கு அறிவாள். இதுபோன்று, பேசியபோது சில சைகைகளையும் அவர் காட்டினார். இது அவையில் இருந்த பெண்களை முகம் சுழிக்க செய்தது. இதையடுத்து, நிதிஷ்குமாரின் பேச்சு தரக்குறைவானதாக இருந்ததகாக பலரும் கண்டனம் தெரிவித்திருந்ததை அடுத்து மன்னிப்பு கோரினார். 

இதையும் படிங்க;- சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்பாரா? ராஜினாமா செய்வாரா? இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி!

Chief Minister Nitish Kumar talk about women is strongly condemned... narayanan thirupathy tvk

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- பீகார் சட்டசபையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பெண்கள் குறித்து பேசியது கடும் கண்டனத்திற்குரியது. கேவலமாக  பேசிய நிதிஷ்குமாரை ஆதரிக்கும் அவரின் கூட்டணி கட்சியினர் பதவிக்காக எந்த நிலைக்கும் தரம் தாழ்ந்து செல்வார்கள் என்பதை உணர்த்தியுள்ளது. நிதிஷ் குமார் இனி அரசியலில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். 

Chief Minister Nitish Kumar talk about women is strongly condemned... narayanan thirupathy tvk

உடலுறவின் போது என்ன நடக்கும், எப்படி நடக்கும், அதை பெண்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்று சைகைகளோடு நக்கலாக, சிரித்து கொண்டே சட்டசபையில் பேசிய விவகாரத்தை கண்டிக்காத எந்த கட்சியும் அரசியலில் இருக்க தகுதியற்ற கட்சிகளாகவே கருதப்படும். I.N.D.I கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் வெட்கி தலைகுனிய வேண்டிய விவகாரம் இது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Chief Minister Nitish Kumar talk about women is strongly condemned... narayanan thirupathy tvk

இதையும் படிங்க;- ஒரு சீட்டுக்கு திமுகவிடம் கையேந்தி 5க்கும், 10க்கும் அலையும் கம்யூனிஸ்டுகள்! இந்தியாவின் சாபக்கேடு.! பாஜக

திராவிட முன்னேற்ற கழகம் நிதிஷ் குமார் பேசியதை ஆதரிக்கிறதா? மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலையில், பெண்களை இழிவாக பேசியுள்ள I.N.D.I கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைப்பாரா மு.க.ஸ்டாலின் அவர்கள்? காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இனியும் அந்த கூட்டணியில் இருக்குமா? வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள் இந்த விவகாரத்தில் வாய் அடைத்து போயுள்ளது ஏன்? ஒட்டு மொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தி, மானபங்கப்படுத்திய நபரை கண்டிக்கத்தவர்கள் மக்கள் தலைவர்களா?  என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios