Asianet News TamilAsianet News Tamil

அமமுகவில் புதிய மாற்றம்..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள மாணவர் அணியை இரண்டு பிரிவாக பிரித்து டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். மேலும் புதிய அணிகளுக்கான நிர்வாகிகளின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். 

TTV Dhinakaran has announced that new students will be formed in Ammk
Author
First Published Jul 30, 2023, 9:13 AM IST | Last Updated Jul 30, 2023, 9:13 AM IST

அமமுகவில் புதிய மாற்றம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் நிர்வாகிகள் மாற்றம் மற்றும் புதிய அணிகளை உருவாக்கியும்  அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், உலகெங்கும் புரட்சியையும், எழுச்சியையும் செயல்படுத்தி ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய சக்தியாகவும், சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்கக் கூடியவர்களாகவும், தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்களும் மாணவர்களே!

அத்தகைய வருங்கால சமூகமான மாணவர்களின் மத்தியில் தூய்மையான புரட்சிகர அரசியலை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் செயல்பட்டுவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி, இன்று முதல் "கழக மாணவர் அணி" மற்றும் "கழக மாணவியர்அணி" இரு சார்பு அணிகளாக உருவாக்கப்படுகிறது.  

TTV Dhinakaran has announced that new students will be formed in Ammk

புதிய நிர்வாகிகள் நியமனம்

கழக மாணவர் அணி செயலாளராகவழக்கறிஞர் திரு.A.நல்லதுரை அவர்களும் (கழக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர்) கழக மாணவியர் அணி செயலாளராக திருமதி.B.ஜீவிதா நாச்சியார் அவர்களும் (கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு இணைச்செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

இதுவரை, கழக மாணவர் அணி செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.R.பரணீஸ்வரன் அவர்களும், கழக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.A.நல்லதுரை அவர்களும், கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு இணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் திருமதி.B,ஜீவிதா நாச்சியார் அவர்களும் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சியே கவிழ்ந்து விடுமோ? பயத்தில் முதல்வர் ஸ்டாலின்! இறங்கி அடிக்கும் இபிஎஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios