MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Politics
  • செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சியே கவிழ்ந்து விடுமோ? பயத்தில் முதல்வர் ஸ்டாலின்! இறங்கி அடிக்கும் இபிஎஸ்!

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சியே கவிழ்ந்து விடுமோ? பயத்தில் முதல்வர் ஸ்டாலின்! இறங்கி அடிக்கும் இபிஎஸ்!

ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, வந்த பின் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறது திமுக என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 30 2023, 07:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சேலம் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றியம் இருப்பாளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 1500க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

 இதையடுத்து கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி;- இன்றைய அரசாங்கம் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்துள்ளனர். 2 ஆண்டு கால ஆட்சியில் என்ன திட்டங்கள் கொண்டு வந்தனர். குடும்ப ஆட்சியாகவும், தமிழகத்தில் சர்வதிகார ஆட்சியாகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, வந்த பின் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறது திமுக என இபிஎஸ் குற்றம்சாட்டினார். 

35

திராவிட மாடல் ஆட்சியில் விடியல் பிறக்கும் என அழகாக பேசி தற்போது விடியாமல் செய்துவிட்டனர். தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சரல்ல பல முதலமைச்சர் ஆட்சி செய்கின்றனர். விலையில்லா மடிக்கணினி, அம்மா மினி கிளினிக்குகள் உள்ளிட்ட திட்டங்கள் திமுக அரசு முடக்கிவிட்டது. 

45

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டன. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. திமுக ஆட்சியில் இதுவரை 58 பாலியல் வன்கொடுமைகள் நடத்துள்ளன. தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை. சிறையில் உள்ள ஒருவர் அமைச்சராக நீடிப்படை பார்த்து நாடே எள்ளி நகையாடுகிறது என விமர்சித்தார்.

55

மேலும் சிறைவாசியாக உள்ள ஒருவரை எப்படி மாண்புமிகு அமைச்சர் என சொல்ல முடியும்?  செந்தில் பாலாஜி ஏதாவது வாக்குமூலம் கொடுத்துவிட்டால் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்படாமல் உள்ளது. முதலமைச்சர் விழித்துக் கொண்டு, செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து விடுவித்தால் மக்கள் பாராட்டுவார்கள். இல்லையென்றால், வருகின்ற தேர்தலில் மக்கள் தகுந்த தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என இபிஎஸ் பேசியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அதிமுக
திமுக
எடப்பாடி பழனிசாமி
மு. க. ஸ்டாலின்
சேலம்
செந்தில் பாலாஜி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
Recommended image2
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?
Recommended image3
கூட்டணிக்கு பெயர் வச்சாச்சு.. ஆனா பிரதமர் வேட்பாளர் யாரு? விஜய்யா? ராகுலா? தவெக-காங்கிரஸ் மோதல் உச்சம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved