ஜெயலலிதா மரண விவகாரம் - 8 பேரை விசாரிக்க தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு !
சசிகலா உட்பட 8 பேர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 இல் உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய் என்றும் அவர் டிசம்பர் 4 ஆம் தேதியே இறந்துவிட்டார் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..‘டிசம்பர் 4’ ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபக்.. ஆறுமுகசாமி ஆணையம் கிளப்பிய புது சர்ச்சை
மேலும், சசிகலா, கே எஸ் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் , முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்பட 8 பேர் மீது ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதையும் படிங்க..நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க..சசிகலா - டிடிவி தினகரன் ‘திடீர்’ சந்திப்பு.. ஜெயலிதாவின் மரணம் இப்படித்தான்! சீக்ரெட் சொன்ன டிடிவி