சசிகலா - டிடிவி தினகரன் ‘திடீர்’ சந்திப்பு.. ஜெயலிதாவின் மரணம் இப்படித்தான்! சீக்ரெட் சொன்ன டிடிவி
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் பரிந்துரையை சசிகலா சட்ட ரீதியாக எதிர்கொள்வார் என்று தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதியே மரணமடைந்தார் என்றும், அதற்கு 2 பேர் சாட்சி என்று ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தங்களது விரிவான விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான 608 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கான சிகிச்சை பற்றி உண்மை நிலை அறிய விசாரணை தேவை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 3 நாட்களுக்கு முன்பே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்துள்ளது.
இதையும் படிங்க..பாலியல் தொழிலில் இலங்கை பெண்கள்.. ஸ்லீப்பர் செல்ஸ் ஊடுருவல்! உளவுத்துறை தந்த ரிப்போர்ட் - பரபரப்பு
மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராதது ஏன்? என்ற கேள்வியும் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தி.நகரில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் பரிந்துரையை சசிகலா சட்ட ரீதியாக எதிர்கொள்வார். ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சைகளை எழுப்பியதே திமுக தான்.
இதையும் படிங்க..‘டிசம்பர் 4’ ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபக்.. ஆறுமுகசாமி ஆணையம் கிளப்பிய புது சர்ச்சை
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான். ஜெயலலிதாவை மருத்துவமனையில் இருந்தபோது தான் நான் பார்த்தேன்.ஜெயலலிதா இறந்த தேதியில் எந்த குழப்பமும் இல்லை.ஆறுமுகசாமி ஆணையமே அரசியலால் தான் செயல்பட்டு வருகிறது. இந்த அறிக்கை பொறுத்தவரை முழுவதுமாக அரசியல் காழ்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறது.
சசிகலாவை தற்போது சந்தித்தற்கு காரணம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பார்க்க வந்தேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் சட்டசபையில் தனி இருக்கை கேட்டு கொண்டுள்ளார்’ என்று கூறினார்.
இதையும் படிங்க..நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்