அண்ணாமலை பார்ட் 2 இவர்தான்.. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக விமர்சித்த துரை வைகோ.!!
ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக செயல்படவில்லை. பாஜகவின் ஊதுகுழளாக செயல்படுகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் மதிமுகவை சேர்ந்த துரை வைகோ.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ இன்று சாமி தரிசனம் செய்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் துரை வைகோ. அப்போது பேசிய அவர், ஆளுநர் தமிழக ஆளுநராக செயல்படவில்லை, பாஜகவின் ஊதுகுழளாக செயல்படுகிறார். அண்ணாமலை பார்ட் 2வாக செயல்படுகிறார். வைகோ உள்ளத்திலும் உடலிலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு எந்த குறைபாடும் இல்லை.
இதையும் படிங்க..இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு !
குஜராத் பால விபத்தில் 135 பேரில் 56 குழந்தைகள் இறந்துள்ளனர். பாலம் காண்ட்ராக்டரை பொறுத்தவரையில் தனியாருக்கு வழங்கியுள்ளனர். பராமரிப்பு முடிந்து மூன்று நாட்களுக்கு பின் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த கம்பெனி அஜந்தா வாட்ச் கம்பெனி. கடிகாரம், ஃபேன் தயாரிக்க கூடிய கம்பெனிக்கு பாலங்களை பராமரிக்கும் அனுபவம் இல்லாத கம்பெனியிடம் இந்த வேலையை கொடுத்துள்ளார்கள்.
இது மிகத் தவறானது. பாஜக ஆளும் குஜராத் அரசாங்கத்தின் அஜாக்கிரதையால் நடந்த விபத்து. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கண்டிப்பாக. அவர் ஆளுநராக செயல்படாமல் பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு செய்தித் தொடர்பாளராக, பாஜகவின் பேச்சாளராக அவரது நடவடிக்கைகள் உள்ளது.
அவர் எப்போது தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்றாரோ அப்போது இருந்தே அவரது நடவடிக்கைகள் அவ்வாறுதான் இருந்து வருகின்றன. சட்டப்படி நடக்காமல் தன்னிச்சையாகவோ, ஜனநாயகத்துக்கு புறம்பாக நடந்துகொள்கிறார் என்று கூறினார்.
இதையும் படிங்க..பாஜகவுக்கு தாவும் எடப்பாடி அணி.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஊழல் பின்னணி.! பற்ற வைத்த ஓபிஎஸ் டீம் !!
இதையும் படிங்க..கோவை கார் வெடிப்பில் சிக்கிய பென் டிரைவ்.. 100க்கும் மேற்பட்ட ஐஎஸ் அமைப்பு வீடியோக்கள் - பரபரப்பு பின்னணி !