இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்.. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு !
சனிக்கிழமை தோறும் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக தொடரும் இந்த மழையால் சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த தொடர் மழையின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க..Viral Video: எங்க வீட்டுக்கு போகணும், நான் வரமாட்டேன்.! திருமணத்திற்கு பிறகு கணவருடன் செல்ல மறுத்த பெண் !!
இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வண்ணம் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அப்போது பேசிய அவர், ‘நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக இருந்தாலும், மாணவர்கள் நலன் கருதி தொடர்ந்து மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.
மேலும், ஜேஇஇ உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றவில்லை. தமிழகத்திற்கு தேசியக் கல்விக் கொள்கை, நீட் தேர்வு வேண்டாம் என்று பிரதமரிடமே கடிதம் கொடுத்துள்ளோம்.
மழைக்காலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மதுரையில் நேற்று கூட்டம் நடத்தி ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒழுகும் பள்ளிக் கட்டிடங்கள், ஊறிப்போன சுற்றுச்சுவர்கள், மின் இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்க வலியுறுத்தி உள்ளோம். மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க..19 வயது பையனை திருமணம் செய்யும் 56 வயது பெண்.. அடேங்கப்பா.! இப்படியொரு காதல் ஜோடியா.!!
இதையும் படிங்க..திமுகவின் கைப்பாவையாக ஆளுநர்.! ஒருநாளும் நடக்காது.. திமுகவை எச்சரித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்