19 வயது பையனை திருமணம் செய்யும் 56 வயது பெண்.. அடேங்கப்பா.! இப்படியொரு காதல் ஜோடியா.!!
தாய்லாந்தில் உள்ள 19 வயது இளைஞர் ஒருவருக்கும், 56 வயதான பெண் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்து நாட்டில் 19 வயதே ஆன டீனேஜ் இளைஞர் ஒருவர், தன்னை விட 37 வயது பெரிய பெண்ணை ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.இவருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதுதான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் வுத்திச்சாய் சந்தராஜ் (19). இவர் ஜன்லா நமுவாங்ராக் (56) என்ற பெண்னை ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவருக்கும் இடையே 37 வயது வித்தியாசம். வடகிழக்கு தாய்லாந்தின், சகோன் நகோன் மாகாணத்தில் இருவரும் வசித்து வந்துள்ளனர். 9 ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டைச் சுத்தம் செய்ய சந்தராஜ் உதவியை நாடியுள்ளார் அந்தப் பெண்.
இதையும் படிங்க..யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!
அடிக்கடி அந்தப் பெண்னுக்கு உதவியுள்ளார் இளைஞர். பிறகு இது நட்பாக மாறி, ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன் இருந்து இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.இதுகுறித்து வுத்திச்சாய் சந்தராஜ், கடந்த இரு ஆண்டுகளாக இருவரும் உறவில் இருக்கிறோம். ஜன்லா ஒரு கடின உழைப்பாளி. எனது வாழ்க்கையில் முதல்முறையாக ஒருவரை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஏன் என்றால் அது இவரைத்தான் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க..2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி
ஆன்லைன் வீடியோ செய்தி ஊடகமான நியூஸ்ஃப்ளேரில் பதிவேற்றப்பட்ட மற்றொரு வீடியோவில், தம்பதியினர் தங்கள் தேதிகளைப் பற்றி செல்லும்போது கைகளைப் பிடித்துக்கொண்டு, தாங்கள் காதலிக்கிறோம் என்று சொன்னார்கள். அதேபோல ஜன்லா இதுபற்றி கூறும்போது, சந்தராஜ் எனக்கு ஒரு சூப்பர் ஹீரோ. தினமும் எனக்கு உதவுவான். அவன் வளர்ந்ததும் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இதை மற்றவர்களிடன் தெரிவிக்கையில் எங்களை பைத்தியம் என்று கூறினார்கள். நாங்கள் நிச்சயம் திருமணம் செய்து கொள்வோம்’ என்று கூறினர்.
இதையும் படிங்க..தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. ஆனால் அந்த 6 இடங்களில் அனுமதி இல்லை!