நளினியை விடுதலை செய்வதில் எந்த தவறும் இல்லை.. கே.எஸ் அழகிரி கொடுத்த புது விளக்கம் !

ஓபிஎஸ், இபிஎஸ் அவர் சிறந்த நண்பராக இருந்தவர்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாகரீகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இதை வேறு விதமாக தீர்த்துக் கொள்ளக் கூடாது. 

Tn congress president ks alagiri speech about perarivalan and nalini released rajiv gandhi case

கே.எஸ் அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘அக்னிபத் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு மேலும் கொடுமையான செயலை இந்தியாவின் மீது திணிக்கிறது. நான்கு ஆண்டுகளில் இளைஞர்கள் ராணுவத்தில் இருந்து என்ன செய்ய முடியும். மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு ராணுவப் படையை பாஜக உருவாக்குகிறது. 

Tn congress president ks alagiri speech about perarivalan and nalini released rajiv gandhi case

மக்களின் வரிப்பணத்தில் இதற்கு அனுமதி உண்டா ? இல்லையா ? ராணுவ வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளது. பல ஆண்டுகளாக அது நடைமுறையில் உள்ளது. பாஜகவின் தற்போது நடைபெறும் ஆட்சிக்கு பிறகு, தேர்தல் வாக்குச்சாவடியில் ஆயுதங்களை ஏந்திய இளைஞர்களை நிறுத்த திட்டம் வைத்துள்ளனர். இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் வருகை 27ஆம் தேதி தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 

இதையும் படிங்க : AIADMK : புரட்சி பயணம் ஆரம்பம்.! ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா..நம்ம லிஸ்ட்லயே இல்லையே ?

பிரதமர் மோடி

இது சர்வாதிகாரத்துக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம். பல்வேறு நாடுகளில் ஹிட்லர், முசோலினி உள்ளிட்ட சர்வாதிகாரிகள் போன்று, அதுவே தான் இந்தியாவில் நடைபெறுகிறது. மக்களிடையே வேறுபாடு ஏற்படுத்துவதற்காக நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி பொதுத்துறைக்கும், தனியார் துறைக்கும் ஆகிய இரண்டிற்குமே அனுமதி கொடுத்தது. பாஜக பொதுத்துறை அழித்து தனியார் துறையை வளர்க்கிறார்கள். இந்தியாவின பொருளாதாரக் கொள்கைக்கும், ஜனநாயகத்திற்கும் தவறான செயல்.

அதிமுக - ஒற்றை தலைமை

ஓபிஎஸ், இபிஎஸ் அவர் சிறந்த நண்பராக இருந்தவர்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாகரீகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இதை வேறு விதமாக தீர்த்துக் கொள்ளக் கூடாது. அதிமுகவில் நடைபெற்றது வருத்தத்திற்கு உரியது. ராகுல் காந்திக்கு தொடர் விசாரணை குறித்த கேள்விக்கு, சர்வதிகாரிதனமாக செயல்படுகிறார் மோடி, கருத்து வேறுபாடு உள்ளவர்களை அழிக்கப் பார்க்கிறார். அதற்கான செயல்பாடே நடைபெற்று வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் ஓராண்டிற்கு இவ்வளவு தான் செய்ய முடியும். 

Tn congress president ks alagiri speech about perarivalan and nalini released rajiv gandhi case

பேரறிவாளன் - நளினி விடுதலை

ஒரு ஆண்டிற்குள் அனைத்து செய்ய முடியாது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதில் பெரும்பாலானவை நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ளவை நிறைவேற்ற முயற்சி வருகிறது. நளினியை விடுவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு இல்லை. பெரிய குற்றம் செய்த பேரறிவாளனையே விடுதலை செய்துவிட்டனர். சிறிய குற்றம் செய்த நளினியை விடுதலை செய்வதில் எந்தத் தவறும் இல்லை’ என்று கூறினார்.

இதையும் படிங்க : TASMAC : டாஸ்மாக் மதுபானங்களின் விலை விரைவில் உயர்கிறது.. மதுப்பிரியர்கள் ஷாக் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios