தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு, திருநீறு மற்றும் ருத்ராட்சம் மாலை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- சொகுசு கப்பலில் தேனிலவு... உல்லாசத்தின் உச்சக்கட்டத்தால் உயிரிழந்த இளம்ஜோடி..!

தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் மாற்றியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சிலை மீது நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கருப்பு கலர் சாயம், சாணி பூசி அவமானப்படுத்தினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, காவல்நிலையத்தில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;- கொத்தடிமைகள் கூட்டத்தை வைத்து கட்சி நடத்தும் கோல்மால்புரம்... மு.க.ஸ்டாலின் மானத்தை வாங்கும் அதிமுக..!

இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், இன்று திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் காவித் துண்டு, திருநீறு மற்றும் கழுத்தில் ருத்ராட்சம் மாலை அணிவித்துள்ளார். பிறகு கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.