சொகுசு கப்பலில் தேனிலவு கொண்டாடிய காதல் ஜோடிகள் நிர்வாணமான இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜெர்மனியை சேர்ந்த காதல் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் வித்தியாசமான முறையில் தேனிலவு கொண்டாட வேண்டும் என கருதினர். இதனையடுத்து, சொகுசு கப்பலில் ஒரு அறையை புக் செய்திருந்தனர். இந்த கப்பல் கடலில் சென்று கொண்டிருக்கும்போதே அவர்கள் தேனிலவை கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் காதல் ஜோடியின் அறை திறக்கவில்லை. இதனையடுத்து, சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் நிர்வாண கோளத்தில் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக உடனே கப்பல் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு பின்னர் கப்பல் கரைக்கு வந்ததும் போலீசார்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், காதல் ஜோடியின் உடம்பில் எந்த காயமும் இல்லை. அவர்கள் நீண்ட நேரம் உடலுறவு கொள்வதற்காக ஏதாவது மாத்திரை எடுத்து கொண்டார்களா என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சொகுசு கப்பலில் தேனிலவு கொண்டாட வந்த காதல் தம்பதிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.