தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. இபிஎஸ் மீது வழக்குப்பதிவா? அமைச்சர் ரகுபதி சொன்ன பரபரப்பு தகவல்.!

ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் சுமத்தி இருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

Thoothukudi shooting incident.. Case against EPS? Minister Raghupathy information

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது மருத்துவமனையில் அறை எடுத்து தங்கி இருந்த குடும்பத்தை சேர்ந்த டிடிவி. தினகரன் இந்த அறிக்கையை வரவேற்க மாட்டார் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி;- ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் சுமத்தி இருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க;- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. ஆக்‌ஷனில் இறங்கிய டிஜிபி.. காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்..!

Thoothukudi shooting incident.. Case against EPS? Minister Raghupathy information

இந்த ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை, இது முழுக்க முழுக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபொழுது யாரிடம் கட்டுப்பாடுகள் அனைத்தும் இருந்தது என்று அந்த ஆணையம் முழுமையாக கூறியுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது மருத்துவமனையில் அறை எடுத்து தங்கி இருந்த குடும்பத்தை சேர்ந்த டிடிவி தினகரன் இந்த அறிக்கையை வரவேற்க மாட்டார் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். 

Thoothukudi shooting incident.. Case against EPS? Minister Raghupathy information

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து உள்துறை முடிவு செய்யும்.  ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைப்படி அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சரிடம் பொறுப்பு முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் ஜெயலலிதாவை மருத்துவத்திற்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பிறகு எப்படி ஓபிஎஸ்சை குற்றம் சுமத்த முடியும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க;- ஜெயலிதாவுக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது தெரியுமா? சசிகலா கூறிய பரபரப்பு வாக்குமூலம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios