ஜெயலிதாவுக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது தெரியுமா? சசிகலா கூறிய பரபரப்பு வாக்குமூலம்..!
தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசியலில் மிகப்பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் சொல்லும் டிசம்பர் 4ம் தேதி மாலை பன், காபி கேட்டார். அதன் பின்னர் தான் மாரடைப்பு ஏற்பட்டது என சசிகலா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசியலில் மிகப்பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, இன்னொரு பக்கம் சசிகலா இரண்டு பேருமே இந்த இரண்டு அறிக்கைகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. அதில், டிசம்பர் 4-ம் தேதி மாலை சுமார் 4.20 மணியளவில் ஜெயலலிதா கேட்ட பன், காபியை மருத்துவமனை செவிலியர் டிராலியில் வைத்து கொண்டு வந்தார். ஜெயலலிதா கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டே அருகில் வை சீரியல் முடிஞ்சதும் எடுத்துக்கறேன் என்றார். சூடு ஆறிவிடும் என்றேன். கை அசைத்து சற்று பொறு சசி என்றார். சிறிது நேரத்திலேயே சீரியல் முடிந்த உடன் கையில் இருந்த ரிமோட்டை ஜெயலலிதா ஆப் செய்தார். நான் டிராலியை அருகில் வைக்க முயன்றேன். அப்போது ஜெயலலிதாவுக்கு அருகில் ஒரு பெண் மருத்துவரும் செவிலியர் ஒருவர் நின்று கொண்டிருந்தனர். அறைக்கு வெளியே டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன் அமர்ந்து இருந்தார்.
திடீரென ஜெயலலிதாவின் உடலில் ஒரு பெரிய நடுக்கம் ஏற்பட்டடு சத்தமிட்டார். நான் அப்போது அக்கா, அக்கா என கத்த தொடங்கினேன். ஜெயலலிதா என்னை பார்த்துக் கொண்டு தனது இரு கைகளையும் உயர தூக்கி என்னை நோக்கி கொண்டு வந்தார். நான் கதறி கொண்டே, ஜெயலலிதாவை தாங்கி பிடித்தேன். ஜெயலலிதா என்னை பார்த்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தார். அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் தீவிர சிகிச்சை கொடுத்தனர். உடனடியாக சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது, அவருக்கு பரிசோதனை செய்த போது ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வெளியே போக சொல்லிவிட்டனர். நான் கூச்சலிட்டப்படியே மயங்கிவிட்டேன். பின்னர், எழுந்து பார்க்கும் போது எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைகள் நடந்து வந்தன.
எய்ம்ஸ் மருத்துவ குழு, டாக்டர் ரிச்சர்ட் பீலே வழிகாட்டுதலின் படி சிகிச்சை நடைபெற்றது. ஜெயலலிதா எப்படியும் பிழைத்துவிடுவார் என்பதால் சிகிச்சை அளிக்க சொன்னேன். ஆனால் டிசம்பர் 5-ம் தேதி வரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இனி மேலும் முன்னேற்றம் ஏற்படாது எனும் அதிர்ச்சி செய்தியை கூறியதும் மீண்டும் மயங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.