Asianet News TamilAsianet News Tamil

கல்வி நிலையங்களில் ஊடுருவும் ஆர் எஸ் எஸ்..! தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்- சீறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆள்பிடிக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி உண்மையில் கலாச்சாரம், இதர நல்லெண்ண நிகழ்வுகளுக்காக அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
 

The Marxist Communist has accused the RSS of infiltrating educational institutions
Author
First Published Nov 18, 2022, 9:00 AM IST

ஆளுநர்களின் தலையீடு

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக  பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.  தமிழக ஆளுநர் ரவி அவர்கள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டும், அவருடைய பொறுப்புக்கு ஒவ்வாத வகையிலும், அத்துமீறியும்  தொடர்ந்து பேசி வருகிறார். பல்வேறு முக்கிய பிரச்சனைகளில்  தமிழகத்தின் நிலைப்பாட்டை மறுதலித்து ஒன்றிய அரசின்  குரலாக ஒலித்து வருகிறார். எனவே தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை திரும்ப பெறக் கோரும் தமிழக எம்.பி.க்களின் மனுவின் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

The Marxist Communist has accused the RSS of infiltrating educational institutions


காசிக்கு மாணவர்கள் பயணம்

மற்றொரு தீர்மானத்தில் இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரையில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. அறிவுசார் மற்றும் கலாசாரத்தின் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு-காசி ஆகிய இரு மையங்களின் வாயிலாக இந்திய நாகரிகத்திலுள்ள ஒற்றுமையை அறிந்துகொள்ள இந்த சங்கமம் ஒரு ஏதுவான தளமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறிய செய்வதற்கு காசி தமிழ் சங்கமம்" என்று நிகழ்ச்சி அமைப்பாளர் சாமுகிருஷ்ண சாஸ்திரி கூறியுள்ளார். மாணவர்கள், கைவினை, இலக்கியம், ஆன்மிகம், வர்த்தகம், ஆசிரியர்கள், பாரம்பரியம், தொழில்முனைவோர், தொழில்கள், கோவில்கள், கிராமப்புறம், கலாசாரம் என்று 12 பிரிவுகளிலிருந்து, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஒவ்வொரு நாள் என்று, ரெயில்களில் மொத்தம் 2,500 பேர் ராமேசுவரம், கோவை, சென்னை ஆகிய இடங்களிலிருந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். 

கால்பந்து வீராங்கனை பிரியாவின் இறப்புக்கு மா.சுப்ரமணியன் பொறுப்பேற்க வேண்டும்... அண்ணாமலை அதிரடி!!

The Marxist Communist has accused the RSS of infiltrating educational institutions

கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ்

முதல் ரயில் ராமேசுவரத்திலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு நவம்பர் 16 அன்று புறப்பட்டுள்ளது. இவர்கள் தளங்களை சுற்றிப்பார்த்துவிட்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்துவிட்டு, அங்குள்ள கண்காட்சியையும் பார்வையிடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் மிக முக்கிய கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் மத்தியில், ஊடுருவும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி யில், கடந்த சில நாள்களுக்கு முன், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநில உயர்கல்விதுறை அல்லது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை விவாதிக்கப் படவில்லை. 

வரலாற்று திரிபு நூல்கள் மூலம் சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவ முயற்சி..! ஆவேசமடைந்த வைகோ

The Marxist Communist has accused the RSS of infiltrating educational institutions

தமிழக அரசு தடுக்க வேண்டும்

மாநில அரசின் எந்த ஒரு பங்களிப்பும் இருப்பதாக தெரியவில்லை. மாநில அரசும் இத்தகைய நிகழ்ச்சி மீது எந்த ஒரு கருத்தும் வெளியிடாதது ஆச்சர்யமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆள்பிடிக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி உண்மையில் கலாச்சாரம், இதர நல்லெண்ண நிகழ்வுகளுக்காக அல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்த வகுப்புவாத நோக்கிலான நிகழ்வுகளை தடுத்து நிறுத்த கல்விதுறையும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறையும், தமிழ்நாடு அரசும் உரிய தலையீடு செய்து தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் இதர ஜனநாயக சக்திகளும் இந்த நிகழ்ச்சி மூலமான பாதிப்பை உணர்ந்து, தடுத்து நிறுத்தும் வகையில் செயலாற்ற சிபிஐ (எம்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது என அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தலையில்லாத முண்டமாக அதிமுக..! இபிஎஸ் உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை- டிடிவி தினகரன் ஆவேசம்

Follow Us:
Download App:
  • android
  • ios