வரலாற்று திரிபு நூல்கள் மூலம் சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவ முயற்சி..! ஆவேசமடைந்த வைகோ

தென் மாநிலங்களை பொறுத்தவரையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள நிலையில் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை எனவும் மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும் தீங்கை விளைவிப்பதாக வைகோ விமர்சித்துள்ளார்.

Vaiko has accused Sanatana forces of trying to infiltrate Tamil Nadu

திராவிட இயக்கங்களில் சேர விரும்பாத இளைஞர்கள்

சென்னை தேனாம்பேட்டையில்  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் திசை புத்தக நிலையத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈழப் போரில் லட்சகணக்கான தமிழர்கள் கடற்கரையில் உயிர் எழுந்துள்ள நிலையில் அவர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியவர் திருமுருகன் காந்தி. இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய தகுதி திருமுருகன் தான் உள்ளது. அரசியலில் ஈடுபாடு உள்ள தமிழக இளைஞர்கள் இங்கு உள்ள திராவிட கட்சிகளில் சேர விருப்பமில்லை எனில் அவர்கள் திருமுருகன் காந்தியை பின்பற்றலாம் என தெரிவித்தார்.

எம்எல்ஏ ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ்..! விளக்கம் அளிக்க காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு

Vaiko has accused Sanatana forces of trying to infiltrate Tamil Nadu

வடக்கு ஒத்துவராது

அடுத்த 15 ஆண்டில் திருமுருகன் காந்தி இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய தலைவராக வருவார் என குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் திருமுருகன் காந்தி பின்னாடி செல்லுங்கள் என்பேன் எனது கட்சிக்கு வாருங்கள் என்று கூட நான் கூற மாட்டேன் என்றார். தென் மாநிலங்களை பொறுத்தவரையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள நிலையில் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை எனவும் மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும் தீங்கை விளைவிப்பதாக தெரிவித்தார். வடக்கில் இருந்து வீசக்கூடிய வாடைக்காற்றும் நமக்கு ஒத்து வராது வடக்கே உள்ள கலாச்சாரமும் நமக்கு ஒத்து வராது என தெரிவித்தார். வடக்கு என்பது நமக்கு எப்போதும் எதிரானது.

சவுக்கு சங்கருக்கு 4 வழக்குகளிலும் ஜாமின்..! நீதிமன்ற உத்தரவால் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்

Vaiko has accused Sanatana forces of trying to infiltrate Tamil Nadu

சனாதன சக்திகள் ஊடுருவ திட்டம்

சசவரலாற்று திரிபு நூல்கள் மூலம் ஊடுவ முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் இதனை தடுக்க நமக்கு கூர்மையான கருவி தேவை அந்த கருவி தான் முற்போக்கு தலைவர்களின் புத்தகங்கள் தான் என தெரிவித்தார். தமிழ்நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் முற்போக்கு தலைவர்கள் கூறிய கருத்துக்களை புத்தகங்களாக எடுத்துச் செல்லுங்கள் என தெரிவித்தார் தமிழ்நாட்டின் விடைகளுக்கு இந்த திசை பதிப்பகம் ஓர் திசையாக இருக்கட்டும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தலையில்லாத முண்டமாக அதிமுக..! இபிஎஸ் உடன் அமமுக கூட்டணி என எங்கும் சொன்னதில்லை- டிடிவி தினகரன் ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios