கால்பந்து வீராங்கனை பிரியாவின் இறப்புக்கு மா.சுப்ரமணியன் பொறுப்பேற்க வேண்டும்... அண்ணாமலை அதிரடி!!

கால்பந்து வீராங்கனை பிரியாவின் இறப்பிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

subramanian should be responsible for the death of football player priya says annamalai

கால்பந்து வீராங்கனை பிரியாவின் இறப்பிற்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு விரைந்து ஆளுநர் ஒப்புதல் பெற வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!

பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது. பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும். பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார். முதல் அமைச்சரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த தவறு நடந்துள்ளது. நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது.

இதையும் படிங்க: வரலாற்று திரிபு நூல்கள் மூலம் சனாதன சக்திகள் தமிழகத்தில் ஊடுருவ முயற்சி..! ஆவேசமடைந்த வைகோ

இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக தவறான சிகிச்சையால் உயிரிழந்த பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios