அண்ணாமலை நடை பயணத்தால் கலவரத்தை ஏற்படுத்த திட்டம்.... தடை விதியுங்கள்- இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவுள்ள நடைபயணத்தை தமிழக அரசு தடைச்செய்ய வேண்டும் என்று, ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

The Aam Aadmi Party has demanded a ban on Annamalai trekking in Tamil Nadu

மணிப்பூர் கலவரம்- போராட்டம்

மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே நடைபெற்ற மோதல் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்த சம்பவத்தில் உரிய நவடிக்கை எடுக்க வில்லையென அம்மாநில பாஜக அரசு மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு கூறி வருகிறது. இதனிடையே மணிப்பூர்  கலவரத்தைக் கண்டித்து தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில், சென்னையில் வசீகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பப்பட்டது.

The Aam Aadmi Party has demanded a ban on Annamalai trekking in Tamil Nadu

ஊழலைப்பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வசீகரன்,  மணிப்பூரில் மிருகத்தனமான செயல் நடைபெற்றுள்ளது. ஆனால் இதனை பிரதமர் மோடி மனிதத்தன்மையோடு நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்தார்.  மணிப்பூரில் பாஜக அரசு செய்த பயங்கரவாதம் என குறிப்பிட்டார். உலகமே இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளது. ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்க சொன்னால், அங்கே நடக்கிறது.. இங்கே நடக்கிறது என வேறு சம்பவங்களை காட்டுவதாகவும் கூறினார்.  ஊழலைப்பற்றி பேச, கேள்வி எழுப்ப அண்ணாமலைக்கு தகுதியில்லையென கூறிய அவர்,எதற்கு இந்த நடை பயணம் என கேள்வி எழுப்பினார். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நடை பயணத்தை தடை செய்ய வேண்டும்,

The Aam Aadmi Party has demanded a ban on Annamalai trekking in Tamil Nadu

நடை பயணத்தை தடை விதியுங்கள்

நடை பயணம் சென்றால் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்,  அண்ணாமலை ஊழலை எதிர்த்து நடை பயணம் செல்லவில்லை, விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. கலவரத்தை தூண்டுவதற்காக நடை பயணம் செல்கிறார் அண்ணாமலை, மற்ற மாநிலத்தை விட தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. வேறு மாநில மக்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளனர். இதனை கெடுப்பதற்காகவே அண்ணாமலை நடை பயணம் செல்கிறார். தமிழகத்தின் அமைதியை கெடுப்பதற்காகவே நடைபயணம் செல்வதாக வசீகரன் குற்றம்சாட்டினார்.

இதையும் படியுங்கள்

தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடி மாற்றம்... என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios