அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆரோக்கியமாக இருக்கணும்.. திமுகவை பங்கமாக கலாய்த்த அண்ணாமலை !

திமுக மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. 2024 வரை வேறெந்த இடைத்தேர்தலும் வரக் கூடாது என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

Tamilnadu bjp state president annamalai trolls cm mk stalin

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரவிந்த் கெஜ்ரிவால் கூட, வேறு மாநில தேர்தல்களில் நின்று பார்த்துவிட்டு, தற்போது டெல்லியோடு ஒதுங்குகிறார்.

ஆனால், நான் ஏற்கெனவே தேசிய அரசியலில் இருக்கிறேன் என்று சொல்கிற முதலமைச்சர் ஸ்டாலின், கும்மிடிப்பூண்டியையே தாண்டாதவர். மம்தாவின் பதவியேற்பு விழாவுக்கு சென்று பேசிவிட்டால் அது தேசிய அரசியலாகுமா? அதனால், தமிழகத்திலிருந்து யாராவது தேசிய அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னால் அது பகல் கனவாகத்தான் முடியும்..!

Tamilnadu bjp state president annamalai trolls cm mk stalin

திமுக மற்ற மாநிலங்களில் தனது கிளைகளை தொடங்கி, அங்கு நடைபெறும் தேர்தலில் 1% ஓட்டையாவது வாங்கிவிட்டு, 'தேசிய அரசியலில் வந்துவிட்டோம்' என்று சொல்லட்டும்!  பா.ஜ.க வித்தியாசமான கட்சி. எங்களோடு வந்து பார்த்தால்தான் திருமாவளவன் அவர்களுக்கு தெரியும். எப்போதும் அந்தப் பக்கமே நாற்காலியைப் போட்டு அமர்ந்திருப்பதால், பாஜக வின் மகிமை சில நேரங்களில் அவருக்கு தெரிவதில்லை.  பாஜக மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கிறது.

இதையும் படிங்க..AIADMK: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்

Tamilnadu bjp state president annamalai trolls cm mk stalin

குறிப்பாக, உள்கட்டமைப்புகளை வைத்து இங்கு அரசியல் நடப்பதே கிடையாது. சாதியைச் சார்ந்துதான் இங்கு அரசியலே நடந்திருக்கிறது. அதை பாஜக உடைத்து கொண்டிருக்கிறது, திமுக மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. 2024 வரை வேறெந்த இடைத்தேர்தலும் வரக் கூடாது. அனைத்து எம்.எல்.ஏ க்களும் உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும்.திரிபுரா, நாகாலாந்தில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios