Explained: தமிழகத்தில் வட இந்தியர்களை குறி வைத்து தாக்கும் தமிழர்கள்.. உண்மையா.? நடப்பது என்ன.? ஓர் அலசல்
தமிழகத்தில் வட இந்தியர்களை தமிழர்கள் தொடர்ந்து தாக்குகிறார்கள் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வட இந்தியர்கள் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. வட இந்தியாவில் போதிய வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு பலர் வேலைக்கு வர தொடங்கி உள்ளனர்.
பீகார், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் வரை வட இந்தியர் எண்ணிக்கை பெருகிவிட்டது. இப்போது வரை பெருகி கொண்டே வருகிறது.
அதுமட்டுமில்லாமல், குற்றச்செயல்களில் வடஇந்தியர்கள் கைதாகும் சம்பவங்களும் நடக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் வடஇந்தியர்கள் கைதாகும் சம்பவங்கள் நடக்க தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு வந்து தமிழர்களின் வேலைகளை வட இந்தியர்கள் பறிக்கிறார்கள்.
குறைந்த கூலிக்கு வேலை பார்த்து தமிழர்களின் வேலைகளை பறிக்கிறார்கள். அதே சமயம் நமது கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களை அனுமதிக்க கூடாது. நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்று ஒரு பக்கம் வாதம் வைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் நாம் பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலையில் பிற மாநில மக்கள் நம் ஊருக்கு வந்தால் என்ன தப்பு? என்ற வாதமும் வைக்கிறது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்ன தமிழ் சமூகம் இப்படி பேசுவது சரியா ? வந்தாரை வாழ மாநிலத்தில் இப்படி கருத்துக்கள் வைக்கப்படலாமா ? என்ற கருத்தும் தற்போது முன் வைக்கப்படுகிறது. தங்கள் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் நல்ல ஊதியம் வழங்கப்படுவதாக கூறி இங்கு வேலைக்கு வருகிறார்கள் வட இந்திய தொழிலாளர்கள்.
இவர்களின் வருகையால் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட ரயிலில் வடமாநில தொழிலாளர்கள் சாரை சாரையாக வந்து சென்னை ரயில்நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!
காமெடி நடிகர் மதுரை முத்து வீடியோ ஒன்று வெளியிட, அது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதுமட்டுமின்றி, மதுரையில் நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் சார்பில் அகில இந்திய சங்குத்தேவன் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில் மதுரை மாநகர் முழுவதுமாக அபாயம் #BoycottVadakkans என்ற எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பை கிளப்பியது.
அண்மையில் கூட ரயில் பெட்டியில் பயணம் செய்யும் வட மாநில இளைஞரை ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறதா ? என்ற ஆய்வை மேற்கொண்டோம். வட இந்தியர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்ற வீடியோ பல வெளியானது. அதில் எதுவும் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செய்தித்தாள்கள் மூலம் அறிந்துகொண்டேன். பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசும்படி தலைமை செயலரையும் டிஜிபியையும் கேட்டுக்கொண்டுள்ளேன் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று தெரிவித்துள்ளது மேலும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழ்நாட்டில், தாக்குதல் நடத்துவது போல சமூக வலைதளங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படுகிறது. உரிய ஆதாரங்களின்றி இதுபோன்ற பதிவுகள் பகிரப்படுகிறது. எனவே, இதை உண்மையென்று நம்பி யாரும் வதந்தியைப் பரப்ப வேண்டாம்.
சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படும் அந்த வீடியோ, உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இடையே நடந்த சண்டை ஆகும். மற்றொரு வீடியோ கோயம்புத்தூரில் உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட வீடியோ. தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான அமைதியான மாநிலம்.சட்டம் - ஒழுங்கைத் திறம்பட உறுதி செய்து பொதுமக்களின் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
எனவே, தாக்குதல் தொடர்பாக பகிரப்பட்டுள்ள இந்த ட்வீட் தவறானது. எனவே, இந்த தவறான தகவலை உண்மையென்று நம்பி இதைப் பகிரவேண்டாம். மீறி இதுபோன்ற பொய்யான வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்