Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!
மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் வங்கி எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வரும் மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி தொடர்பான சில வேலைகள் இருந்தால், மார்ச் மாதத்தில் உங்கள் அருகிலுள்ள கிளைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், முதலில் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வங்கி விடுமுறைப் பட்டியலைச் சரிபார்க்கவும். இந்த விடுமுறைகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்கும். இந்த நாட்களில், ஆன்லைன் மற்றும் நெட் பேங்கிங் சேவைகள் செயல்படும்.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் இங்கே,
மார்ச் 03 - சாப்சார் குட் (ஐஸ்வால், மிசோரம்)
மார்ச் 05 - ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
மார்ச் 07 - ஹோலி (இரண்டாம் நாள்)/ஹோலிகா தஹன்/துலாண்டி/டோல் ஜாத்ரா (பேலாபூர், டேராடூன், குவஹாத்தி, ஹைதராபாத் - தெலுங்கானா, ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பனாஜி, ராஞ்சி மற்றும் ஸ்ரீநகர் பகுதிகள்)
மார்ச் 8 - அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன் மற்றும் காங்டாக் உள்ளிட்ட சில நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
மார்ச் 09 - ஹோலி (பாட்னா)
மார்ச் 11 - இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 12 - ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
மார்ச் 19 - ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
மார்ச் 22 - பேலாப்பூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், இம்பால், மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் பாட்னா உள்ளிட்ட சில நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
மார்ச் 25 - நான்காவது சனிக்கிழமை
மார்ச் 26 - ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
மார்ச் 30 - அகமதாபாத், போபால், புவனேஸ்வர், சண்டிகர், பாட்னா, லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
இதையும் படிங்க..Exit Poll : வடகிழக்கு இந்தியாவை கைப்பற்றும் பாஜக - கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன.? ஒரு பார்வை