Exit Poll : வடகிழக்கு இந்தியாவை கைப்பற்றும் பாஜக - கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன.? ஒரு பார்வை
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற சூழலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
திரிபுரா
5 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் இருந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான இடது முன்னணி, 2018இல் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.
அதை மீட்டெடுக்க இந்த முறை பெரும் பலப்பரீட்சை நடைபெறுகிறது என்றே கூறலாம். இடது முன்னணியில் இந்த முறை காங்கிரஸும் இடம்பெற்றிருக்கிறது. 2019இல் தொடங்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சியும் (திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி) இந்தத் தேர்தலில் களமிறங்கியிருப்பதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
2018ல் நடந்த பொதுத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. அதற்கு முன்பு வரை, திரிபுரா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. திரிபுராவில் பாஜக 55 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 5 இடங்களிலும் போட்டியிடுகின்றது.
மேலும், கம்யூனிஸ்டுகள் 46 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். அதுமட்டுமில்லாமல், திப்ரா மோத்தா கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் 28 தொகுதிகளில் போட்டியில் உள்ளது.
மேகாலயா
2018 தேர்தலில் 47 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வெறும் 2 இடங்களில்தான் வென்றது. இம்முறை என்.பி.பி கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு 60 தொகுதிகளிலுமே பாஜக வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 21 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாகத்தான் இருந்தது.
இதில் 20 இடங்களில் வென்ற என்.பி.பி, பாஜக மற்றும் சிறிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது என்பதும் குறிப்பிடவேண்டிய விஷயமாக உள்ளது. ஆளும் தேசிய மக்கள் கட்சி 57 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் மோதுகின்றன.
நாகாலாந்து
கடந்த தேர்தலில் பா.ஜ.கவும், தேசிய மக்கள் கட்சியும் இணைந்து சுயேச்சைகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த முறையும் பா.ஜ.கவும், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் இணைந்தே தேர்தலை எதிர்கொள்கின்றது. காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.
நாகாலாந்தில் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சி 40 தொகுதிகளிலும் பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 23 தொகுதிகளிலும், நாகா மக்கள் முன்னணி 22 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பாஸ்வானின் ஜன்சக்தி கட்சி 15 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
கருத்துக்கணிப்பு சொல்வது என்ன ?
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் கடந்த 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது.
அதே சமயம், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி என்று கூறப்படும் என்.பி.பி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் இருந்து தெரிய வந்துள்ளது. வரவுள்ள 2024 ஆம் ஆண்டு மக்களவைக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த மூன்று மாநிலங்களின் தேர்தல் அமைய உள்ளது என்றே கூறலாம். ஆட்சியில் நீடிக்க போதுமான இடங்களை விட அதிக இடங்களைப் பெறுவதற்கு பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த 7 மாநிலங்கள் மொத்தம் 24 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.அவற்றில் 17 தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன. பாஜக ஆட்சியில் பங்கு இல்லாத ஒரே வடகிழக்கு மாநிலம் மிசோரம். மிசோரம் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை நாகாலாந்து மற்றும் திரிபுராவில் பழைய கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
பழங்குடியினரின் மாநிலங்களான இந்த 3 மாநிலங்களை யார் கைப்பற்ற போகிறார் என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. கருத்துக்கணிப்பில் மூன்றில், இரண்டு மாநிலங்களில் பாஜக முந்துகிறது. இந்த ஆண்டு மொத்தம் 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பாஜக எவ்வித தாக்கதி ஏற்படுத்தும் என்பதே அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க..உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஓரமா போயி விளையாடுங்க.. குறுக்க வராதிங்கப்பா.! கலாய்த்த சீமான்