பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு என்ன ஆச்சு.. டுவிட்டர் பதிவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

சிதம்பரத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இந்த பொதுக்கூட்டத்தில் திடீரென பங்கேற்காதது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதற்கான காரணத்தை அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

tamilnadu BJP president Annamalai Illness

உடல்நலக்குறைவால் என்னால் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என அண்ணாமலை தெரிவித்த தகவலால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் ஒருபோதும் தாமரை மலராது என்று கூறிவந்தவர் மத்தியில் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஆளும் திமுகவிற்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சியான அதிமுகவை விட பாஜக பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறது. இதனால், திமுகவினரே பாஜக அரசு வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது என கூறி வருகின்றனர். அதேபோல், ஜெயலலிதா பாணியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து அண்ணாமலை அதிரயாக நீக்கி வருகிறார். 

இதையும் படிங்க;- தமிழகத்தில் பாஜக அசுர வளர்ச்சி.. இதை திமுக நிர்வாகிகளே மறுக்க மாட்டார்கள்.. வேல்முருகன் சொன்ன ஷாக் தகவல்..!

tamilnadu BJP president Annamalai Illness

இந்நிலையில், சிதம்பரத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இந்த பொதுக்கூட்டத்தில் திடீரென பங்கேற்காதது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதற்கான காரணத்தை அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் BJP!பெரிய கட்சி சிறிய கட்சியாக மாறப்போகிறது!அதிமுகவை எச்சரிக்கும் பூங்குன்றன்

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் என்னால் இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.

 

அதற்காக கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார். இவரது பதிவு பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  என்னது அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு தம்பியா? BJP ஆளுங்க சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதை.. கடுப்பான கஸ்தூரி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios