என்னது அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு தம்பியா? BJP ஆளுங்க சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதை.. கடுப்பான கஸ்தூரி

நாக்கு கூசும் அளவிற்கு ஆபாச வார்த்தையால் பேசி சர்ச்சையில் சிக்கி பாஜக மாநில நிர்வாகிகள் டெய்சி மற்றும் திருச்சி சூர்யா சமாதானமாகிவிட்டதை நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

Actoe Kasthuri Shankar slams bjp Daisy Saran

நாக்கு கூசும் அளவிற்கு ஆபாச வார்த்தையால் பேசி சர்ச்சையில் சிக்கி பாஜக மாநில நிர்வாகிகள் டெய்சி மற்றும் திருச்சி சூர்யா சமாதானமாகிவிட்டதை நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

தமிழக பாஜகவில் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவாவிற்கும், சிறுபான்மையினர் மாநில தலைவர் டெய்சி சரணுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் டெய்சி சரணை சூர்யா திட்டியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த காயத்ரி ரகுராம் 6 மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

இதையும் படிங்க;- பெண்களை தவறாக பேசினால் கையே வெட்டுவேன்னு சொன்னீங்க! என்னாச்சு! நேரம் பார்த்து அண்ணாமலையை வச்சு செய்யும் திமுக

Actoe Kasthuri Shankar slams bjp Daisy Saran

இந்நிலையில் காயத்ரி ரகுராமிற்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில்.  **டையை அறுத்து மெரினா வில் எறிஞ்சுருவோம், நத்தா  மோடி அண்ணாமலை யார் கிட்டே வேணா போ, படுத்து பதவி வாங்கின உனக்கே  திமிருன்னா... என் ஜாதிக்கு எனக்கு எவ்வளவு இருக்கணும், பேசுபவனை விட்டுட்டு பெண்களை தண்டிப்பதுதான்  உங்கள் அரசியலென்றென்றால்... அதை விட  மானம்கெட்ட பிழைப்பு உலகில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

Actoe Kasthuri Shankar slams bjp Daisy Saran

இந்நிலையில், சூர்யா சிவா எனக்கு தம்பி மாதிரி... டெய்சி எனக்கு அக்கா மாதிரி... இனி சுமூகமாக தொடருவோம்"  கூட்டாக பேட்டியளித்திருந்த நிலையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.

 

இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- என்னது தம்பியா ?!  அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை. அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. @DaisyThangaiya வுக்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே..🩴 இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் ! #உவ்வே என கஸ்தூரி பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  ஆபாசமாக பேசுபவனை விட்டு விட்டு..! பெண்களைத் தண்டிப்பதா.? இது மானம்கெட்ட பிழைப்பு- கஸ்தூரி ஆவேசம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios