தமிழகத்தில் பாஜக அசுர வளர்ச்சி.. இதை திமுக நிர்வாகிகளே மறுக்க மாட்டார்கள்.. வேல்முருகன் சொன்ன ஷாக் தகவல்..!

தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலராது என கூறிவந்தவர்கள் அனைவரும் தற்போது பாஜக வளர்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆளும் திமுகவிற்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சியான அதிமுகவை விட பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. 

BJP tremendous growth in Tamil Nadu.. velmurugan

தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை என  தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலராது என கூறிவந்தவர்கள் அனைவரும் தற்போது பாஜக வளர்ச்சியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆளும் திமுகவிற்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சியான அதிமுகவை விட பாஜக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் திமுக கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இதுவரை நமது எதிரி அதிமுகவை எதிர்த்தோம்.

இதையும் படிங்க;- தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் BJP!பெரிய கட்சி சிறிய கட்சியாக மாறப்போகிறது!அதிமுகவை எச்சரிக்கும் பூங்குன்றன்

BJP tremendous growth in Tamil Nadu.. velmurugan

இந்த முறை நாம் ராட்சசனை பார்க்கப் போகிறோம். பிசாசு மாதிரி உருவெடுத்து வருகிறது பாஜக. இந்த முறை நாம் பெரிய பண திமிங்கலத்தை எதிர்க்கப் போகிறோம். பணம் மற்றும் அதிகார பலத்தோடு போராடுவார்கள். அதனை நாம் முறியடிக்க வேண்டுமென்றால், நாம் பூத் கமிட்டிகளை வலுவாக அமைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். 

BJP tremendous growth in Tamil Nadu.. velmurugan

அதேபோல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதில் இன்று யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சி இல்லாமல் இனி யாரும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அது வளர்ந்து வருகிறது என்று கூறியிருந்தார். 

BJP tremendous growth in Tamil Nadu.. velmurugan

இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மக்கள் மத்தியில் பாஜகவிற்கு என்று ஒரு செல்வாக்கு கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது பெருகி வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. திமுக பொதுச்செயலாளர் மட்டுமல்லாது பல்வேறு திமுக நிர்வாகிகளும் கூட பாஜக வளர்ந்து வருவதை மறுக்கவில்லை. அவர்களுக்கும் இது தெரிந்தே இருக்கிறது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக வெற்றி ஆட்சி அமைத்தால் வாழ்த்துக்கள் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-என்னது அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு தம்பியா? BJP ஆளுங்க சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதை.. கடுப்பான கஸ்தூரி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios