Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு என பெயர் வந்துள்ளது - அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழ்நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு என்ற பெயர் வந்துள்ளதாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

tamil nadu government should control and manage the price of tomato and onion says anbumani ramadoss
Author
First Published Jul 12, 2023, 4:19 PM IST

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி  விமான நிலையம் வந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், விவசாய பயன்பாட்டில் இருந்த நிலங்கள் மற்ற பயன்பாட்டிற்கான நிலமாக அதிகம் மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 48 சதவீதமாக இருந்த விவசாய நிலம் தற்போது 38 சதவீதமாக மாறி உள்ளது. இதற்கு காரணம் கடந்த 50 ஆண்டுகளில் இந்த இரண்டு கட்சிகளும் பாசன வசதிக்கு எந்த திட்டமும் நீர் பாசன திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யவில்லை. கால மாற்றம், பருவ நிலை மாற்றம் மத்தியில் எதிர் காலத்தில் நாம் பெரிய நெருக்கடியில் உள்ளோம்.

கர்நாடகா சட்ட பேரவையில் அனை கட்ட போறோம் என கர்நாடகா கூறுவது கண்டிக்கதக்கது. இரண்டு மாநில நல் உறவை கெடுக்கும் வகையில் கர்நாடகவில் உள்ள முதல்வரும், துணை முதல்வரும் தூண்டி வருகின்றனர். இது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். நீர் பங்கீட்டில் நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகா கடை பிடிக்க வேண்டும். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முத்துசாமி (மது விலக்கு துறை) - இந்த துறைக்கு அவர் வந்தது பராவாயில்லை என்று நினைத்தேன் - ஆனால் அவர் பேசுவதை பார்த்தால் பயமாக உள்ளது.

இனி காலையில் டி, காபி தேவையில்லை; பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் - செல்லூர் ராஜூ நக்கல் பதில்

மது விற்பனை துறை என்று எண்ணிக் கொண்டு வருகின்றனர். திருமணத்தில் மது  விற்பனை, சந்துக்கடை விற்பனை என மது விற்பனை துறையாக தமிழக மது விலக்கு துறை செயல்பட்டு வருகிறது. மது விற்பனை கடந்த ஆண்டு 36 ஆயிரம் கோடி. இந்த ஆண்டு 45 ஆயிரம் கோடி. கடைகளை அடைக்க மனம் இல்லாமல் அரசு 500 கடைகளை மூடி உள்ளது. தமிழகத்தில் சந்துகடையுடன் சேர்ந்து 25 ஆயிரம் கடைகள் உள்ளன.

தமிழ் நாடு என்ற பெயர் மாறி கஞ்சா நாடு என பெயர் வந்துள்ளது. கூலிப்படை கலாசாரத்தை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். காவல் துறைக்கு கஞ்சா விற்பனை பற்றி தெரியும். கஞ்சாவை யார் விற்பனை செய்கிறார்கள்? எப்படி வருகிறது? எல்லாம் தெரியும். ஆனாலும் நடவடிக்கை இல்லை. இந்த தலைமுறை அழிந்து கொண்டு உள்ளது. தமிழக முதல்வர் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

வேலூரில் கோவிலை கைப்பற்ற வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை விரட்டியடித்த பொதுமக்கள்

தடுப்பனை கட்டினால் மனல் அல்ல முடியாது என்பதால் இரண்டு அரசுமே தடுப்பணை கட்ட முயற்சி செய்வதில்லை. நீர் மேலாண்மைக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். அரசு விவசாயத்தில் முதலீடு செய்ய வேண்டும். திராவிட மாடல் என்று சொன்னால் போதுமா? நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

தக்காளி மற்றும் வெங்காயம் மிக பெரிய அளவில் மக்களுக்கு சுமையாக உள்ளது. மேகதாது விவகாரத்தில் முன்கூட்டியே ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள். கர்நாடகாவில் முதல்வர் இது குறித்து பேச வேண்டும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. நாடாளுமன்ற தேர்தல் பொறுத்த வரை எங்கள் நிலைபாட்டை நாங்கள் எடுக்கவில்லை. 

ஆட்சியை கலைக்க முடியாது. ஆட்சியை கலைப்பது என்பது எல்லாம் அந்த காலம். நீதிமன்றம் உள்ளது. எனவே அதற்கு எல்லாம் சாத்தியம் அல்ல என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios