இனி காலையில் டி, காபி தேவையில்லை; பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் - செல்லூர் ராஜூ நக்கல் பதில்
இனிவரும் காலங்களில் காலை 7 மணிக்கு டி, காபி குடிப்பதற்கு பதிலாக பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு பல மடங்கு சிறப்பாக நடைபெற உள்ளது.
அதிமுகவுக்கு ஏறுமுகம் தொடங்கி இருக்கிறது. திமுகவுக்கு இனி இறங்கு காலம் தான். காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது. மினி குவாட்டர் மக்களுக்கு கொடுக்க உள்ளார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. காலையில் 7 மணிக்கு காபி, டீ குடிக்க வேண்டாம். பிராந்தி, விஸ்கி குடிக்கலாம். திமுக அரசு எதை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.
கரூரில் ஆபத்தை உணராமல் பொதுவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ள சிலிண்டர்கள் - மக்கள் கோரிக்கை
முன்னாள் முதல்வர் கலைஞர் தான் இந்த தலைமுறையை கெடுத்தவர். தமிழக மக்களை குடிகாரன் ஆக்கிய முதல்வராக ஸ்டாலின் பெயர் எடுப்பார். பள்ளிக்கூடத்துக்கு போகும்போதே குடித்துவிட்டு போங்கள் மட்டையாகி விடுங்கள். கூலித் தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள் காலையில் குடித்துவிட்டு வேலைக்கு சென்றால் குடும்பத்திற்கு உத்தரவாதம் யார் கொடுப்பது? இது எங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
வெங்காயம் விலை 240 ரூபாய் ஆகி விட்டது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும் வெங்காய விலையை கேட்டாலே இவர்கள் ஆட்சியில் கண்ணீர் வருகிறது. வீட்டு வரி, மின் கட்டண உயர்வு. 2 கோடியே 25 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தாலும் யாரும் திமுகவிற்கு ஓட்டு போட மாட்டார்கள்.
வேலூரில் கோவிலை கைப்பற்ற வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை விரட்டியடித்த பொதுமக்கள்
திமுகவின் துக்ளக் தர்பார் ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்.கலைஞர் நூலக மாநாட்டை மக்கள் கூட்டத்தை செயற்கையாக கூட்ட நினைக்கிறார்கள். தக்காளியை ரேஷன் கடையில் விற்பது பெருமையா? நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும். திமுகவினர் செந்தில் பாலாஜியை சுதந்திரப் போராட்ட தியாகி போல் பார்க்கின்றனர் என்றார்.