பொது இடங்களில் முகத்தை காட்ட முடியவில்லை.. அவமானத்திற்கு ஆளாகியுள்ளேன்,மன உளைச்சலில் தவிக்கிறேன்-செல்லூர் ராஜூ

நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்பு கிடைக்க கூடாது என்ற தீய நோக்கத்துடன் அரசியல் ரீதியாக என்னை சேதப்படுத்துவது மட்டுமே இந்த செய்தியின்  நோக்கமாகும் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Sellur Raju requests to take action against the companies that tarnished my name KAK

செல்லூர் ராஜூ புகார்

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் ராஜு, மதுரை காவல் ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  அந்த புகார் மனு தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சார்பாக போட்டியிட்டு  மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,   இரண்டு முறை அமைச்சராக 10 ஆண்டுகள் கூட்டுத்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.  என்னுடைய கட்சித் தலைமையில் எனக்கு நல்ல பெயர் உண்டு.  அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் அரச அலுவலர்களிடமும் எனக்கு நல்ல பெயர் உண்டு.

அதிமுகவில் களப்பணியாளராக தொடங்கிய எனது  அரசியல் பயண எனது நேர்மையின் காரணமாக வார்டு செயலாளர், பகுதி கழகச் செயலாளராகவும் பணியாற்றி, கடந்த 21 ஆண்டுகளாக மதுரை மாநகர் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் 28 தேசிய அளவில் விருதுகளை பெற்றுள்ளேன். 

Sellur Raju requests to take action against the companies that tarnished my name KAK

உண்மைக்கு புறம்பான செய்தி

இந்த நிலையில் எனது பெயரை களங்கப்படுத்தும் வகையில்  நவமணி வேதமாணிக்கம் என்பவர் கொடுத்த பேட்டியை  'அதிமுகவிற்கு நிதி கொடுக்காத தால்  தான் ரோட்டில் வாழும் கோடீஸ்வரன்' 'அதிமுக ஆட்சியில் செல்லூர் ராஜு முன்பு நடந்த பேரம்' என்ற அவதூறான தலைப்பில் தனியார் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளிலுத் செய்தி வெளியிட்டுள்ளது.  என்னைப் பற்றி அவதூறு செய்திகள் தொடர்ந்து ஒளிபரப்பானதால் கட்சியின் தொண்டர்களும், கட்சித் தலைமையில் உள்ளவர்களும் தொலைபேசி மூலமாகவும்,  நேரிலும் தொடர்பு கொண்டு அவதூறு தகவல் செய்திகளை குறித்து தொடர்ந்து விசாரித்தார்கள்.

 என்னைப் பற்றி தொலைக்காட்சி மற்றும் நாளிதழில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை.  என்னிடமிருந்து சரிபார்க்கப்படாமல் தகவல்களை உண்மை தன்மை ஆராயாமல் வெளியிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட செய்தியை என்னிடம் ஆலோசிக்காமல் வெளியிட்டப்பட்டுள்ளது. மேலும் எனது நட்பெயருக்கு களங்கும் ஏற்படுத்தி உள்ளதாக அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Sellur Raju requests to take action against the companies that tarnished my name KAK

வேதனையில் தவிக்கிறேன்

பொதுமக்கள், உறவினர்களும், எனது கட்சி நிர்வாகிகளும்  என்னை தொலைபேசி ,நேரிலும் . இதனால் நான் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதோடு அவமானத்திற்கும் ஆளாகியுள்ளேன்.  எனது குடும்ப உறுப்பினர்கள் நண்பர்களும் மன உளைச்சல் ஏற்பட்டு சொல்லல்லா துயரம் அடைந்துள்ளார்கள்.  பொது இடங்களில் முகம் காட்ட முடியாமல் நானும் எனது குடும்பத்தினரும் பெரிதும் அல்லல் பட்டு வருகிறோம். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தவயாகும்.

பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட செய்தியாகும்.  எதிர்காலத்தில் நடக்கவுள்ள நாடாளுமன்ற மற்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எனக்கு வாய்ப்பு கிடைக்க கூடாது என்ற தீய நோக்கத்துடன் அரசியல் ரீதியாக என்னை சேதப்படுத்துவது மட்டுமே இந்த செய்தியின்  நோக்கமாகும்,  எனவே இந்த உண்மைச் செம்மை செய்தியை ஆராயாமல் வெளியிட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் செல்லூர் ராஜூ கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

பயிர் கடனுக்காக பிரீமியம் செலுத்தியது ரூ.9484.... ஆனால் இழப்பீடோ வெறும் ரூ.10- சீறும் ராமதாஸ்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios