Asianet News TamilAsianet News Tamil

உதயநிதியால் முடங்கிய திரைப்படங்கள்..! சபரீசரின் கண் அசைவிற்காக காத்திருக்கும் அதிகாரிகள்.? - செல்லூர் ராஜூ

அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, எடப்பாடியாரின் கீழ் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என  முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.
 

Sellur Raju has alleged that the film industry is controlled by Udayanidhi
Author
First Published Aug 26, 2022, 1:17 PM IST

பொம்பை போல மதுரை மேயர்

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 30 இலட்ச ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பங்கேற்றார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு,  மதுரை மாநகராட்சியில் மேயராக உள்ள இந்திராணி நிதியமைச்சரின் நிழலாக செயல்படுகிறார், நிதியமைச்சர் கீ கொடுத்தால் மட்டுமே மேயர் பொம்மை போல செயல்படுகிறார், மதுரை மாநகராட்சியில் மேயர் எந்தவொரு பணிகளும் செயல்படுத்தவில்லை, மதுரை மாநகராட்சி இயங்குதா? இயங்கவில்லையா என தெரியவில்லை, மதுரை மாநகராட்சி மட்டுமல்ல தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது,

பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு ஆடியோ..! இது அண்ணாமலை குரல் தான், ஆனால் ...! பகீர் கிளப்பும் பாஜக நிர்வாகி

திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது ஒன்றும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒன்றும் பேசி வருகிறது, தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு தற்போது வரை நிறைவேற்ற வில்லையென செல்லூர் ராஜூ தெரிவித்தார். கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு  பதில் அளித்த அவர், துரைமுருகன் சொன்னது போல அவர்கள் அனைவரும் விபச்சாரிகளா? என கேள்வி எழுப்பினார். 

Sellur Raju has alleged that the film industry is controlled by Udayanidhi

உதயநிதி கட்டுப்பாட்டில் சினிமா

சினிமாத்துறை உதயநிதி ஸ்டாலின் கையில் உள்ளது, உதயநிதிக்கு படம் வழங்காததால் பல படங்கள் முடங்கி கிடக்கிறது, சபரீசன் கண் அசைவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள், முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார், மக்களை கவனிக்கவில்லை, அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, எடப்பாடியார் தலைமையின் கீழ் அதிமுக தொண்டர்கள் உள்ளனர், திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறார்கள், திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், அதிமுக ஆட்சி காலத்தில் தான் மக்களுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது,

சிறையை காட்டி அச்சப்படுத்த முடியாது..! இனி தான் ஆட்டத்தை பார்க்கப்போறீங்க...! ஸ்டாலினை எச்சரிக்கும் பாஜக

Sellur Raju has alleged that the film industry is controlled by Udayanidhi

தமிழ்நாட்டில் சிங்கமாக செயல்படுவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்திக்கும் போது பணிந்து செயல்படுகிறார், முதல்வர் விளம்பரம் தேடாமல் மக்களுக்காக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும், தமிழகத்தில் 52 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருவதால் திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை ஆகும், தரம் குறைந்து பேசும் அரசியல்வாதிகள் நீடித்து செயல்பட்டதில்லை, 2026 ல் நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்கும், 2026 ல் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும், 2024 ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 39 இடங்களை பிடிக்கும் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவினரை விலைக்கு வாங்க பேரம் பேசும் ஓபிஎஸ்.? தரம் தாழ்ந்த செயலை வரலாறு மன்னிக்காது- ஆர்பி உதயகுமார் ஆவேசம்

 


 

Follow Us:
Download App:
  • android
  • ios