Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவினரை விலைக்கு வாங்க பேரம் பேசும் ஓபிஎஸ்.? தரம் தாழ்ந்த செயலை வரலாறு மன்னிக்காது- ஆர்பி உதயகுமார் ஆவேசம்

அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, எதிர்காலத்தை தொலைத்துவிட்ட ஓபிஎஸ், தன்னை நிலைநிறுத்தி கொள்ள மௌனயுத்தலிருந்து தற்போது தொண்டர்களை விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 

Former minister RB Udayakumar has accused O Panneer Selvam of acting with selfish interests
Author
First Published Aug 26, 2022, 12:39 PM IST

'தொண்டர்களிடம் விலை பேசும் ஓபிஎஸ்'

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் அதிமுக நிர்வாகிகளை விலை கொடுத்து வாங்க முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை இழந்து, அரசியல் எதிர்காலத்தை தொலைத்து விட்டு, ஆதரவு இல்லாமல் நிற்கின்ற ஓபிஎஸ் தனக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொள்ள மௌன யுத்தத்தை தொடங்கியவர் தற்போது விலை பேசும் யுத்தத்தை தொடங்கியுள்ளார், தன்னுடைய செல்வாக்கை காட்டிக்கொள்ளும் முயற்சி அவருக்கு பின்னடைவுதான் தரும், அதிமுகவில் விசுவாசமுள்ள தொண்டர்கள் உள்ளனர் பதவி, பணம் என்று விலைபேசி தொடர்ந்து முயற்சித்து வருகிறார் ஓபிஎஸ்சும் அவரது புதல்வர்களும், தொண்டர்கள் ஆதரவை பெற பதவி,பணம் என்று விலை பேசி வரும் நடவடிக்கைகள் தொண்டர்களை வேதனை அடையச் செய்துள்ளது, தொண்டர்கள் எங்களிடம் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் காலம் தொட்டு உழைத்து வருகிறோம், எடப்பாடியார் தலைமையில் கழகப் பணி, மக்கள் பணி ஆற்றிட உறுதி ஏற்று உள்ளோம், ஆனால் எங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஓபிஎஸ்சும் அவர்களது புதல்வர்களும் ஆசை வார்த்தை கூறுகின்றார்கள் என்றுகூறினார்கள்.

Former minister RB Udayakumar has accused O Panneer Selvam of acting with selfish interests

'சுயநலமாக செயல்படும் ஓபிஎஸ்'

இதுபோன்று தொண்டர்களின் எதிர்காலம் குறித்து எத்தனை முறை பேசி உள்ளீர்கள், தற்பொழுது எந்த உரிமையோடு பேசுகிறீர்கள் என்பதை விளக்கிச் சொன்னால் சாலப் பொருத்தமாக இருக்கும், தொலைத்துவிட்ட செல்வாக்கை மீண்டும் பெற முயற்சி செய்ய தொண்டர்களை தவறாக எடை போட்டு விடாதீர்கள், நீங்கள் விடும் அழைப்பு ஒவ்வொன்றும் உங்களுக்கு பின்னடை தந்து கொண்டிருக்கும், நீங்கள் விலை பேசும் வியாபார தந்திரத்தை கவலையும், வேதனை அளிப்பதாக தொண்டர்கள் பேசுகிறார்கள், தொண்டர்களின் ஆதரவை பெற, தன் சுயநலத்தால் ஆசை வார்த்தை கூறி பேரம் பேசுவது உங்களுக்கு தரம் தாழ்ந்த செயலாகும், சுயநலத்தால் எதிலும் வெற்றி பெற முடியாது, அதுக்கு பல உதாரணங்களை சொல்லலாம் தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உங்களுக்கு சொந்தமான கிணற்றை மக்களின் குடிநீருக்காக அன்பளிப்பாக தருகிறேன் என்று கூறிவிட்டு, பின்பு வேறு நபருக்கு விற்பனை செய்த பொழுது பொதுமக்கள் உங்களை எதிர்த்து காலி குடத்துடன் ரோட்டில் போராட்டம் நடத்தினார்கள், உங்களுக்கு எதிராக பல்வேறு மோதல்கள் வெடித்தது, நீங்கள் துணைமுதலமைச்சராக இருந்த பொழுது தான் இது நடைபெற்றது, அது உங்களின் சுயநலத்திற்கு ஒரு சான்றாகும், ஆசை வார்த்தை கூறி, தூண்டில் உள்ள மண்புழுவுக்கு ஆசைப்பட்டு மீன் இறையாக கூடிய சூழ்நிலை வந்துவிடக்கூடாது, இன்றைக்கு எடப்பாடியார் பின்னால் உறுதியாக ஒன்னரை கோடி தொண்டர்கள் திரண்டு உள்ளனர்,

பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு ஆடியோ..! இது அண்ணாமலை குரல் தான், ஆனால் ...! பகீர் கிளப்பும் பாஜக நிர்வாகி

Former minister RB Udayakumar has accused O Panneer Selvam of acting with selfish interests

எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு

மீண்டும் அம்மாவின் புனித அரசை மலர செய்ய எடப்பாடியார் உழைத்து வருகிறார், ஆனால் இன்றைக்கு ஓபிஎஸ் சுயநல அரசியலால் தொண்டர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது, இது அதிமுகவை வலுப்படுத்தும் செயல் அல்ல, கடந்த நான்காண்டுகளில் முதலமைச்சராக இருந்த பொழுது அம்மாவின் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், எதிர்க்கட்சியினர் 40 ஆயிரம் போராட்டம் நடத்தினார்கள், அதையெல்லாம் தன்னுடைய மதிநுட்பத்தால் எதிர்கொண்டு முறியடித்தார், அது மட்டுமல்ல  திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து ஒரு கோடி 40 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை இந்த இயக்கத்திற்கு பெற்று தந்தார், கூட்டணி கட்சிகளை எல்லாம்  சேர்த்து 75 சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கி கொடுத்தார்,

சிறையை காட்டி அச்சப்படுத்த முடியாது..! இனி தான் ஆட்டத்தை பார்க்கப்போறீங்க...! ஸ்டாலினை எச்சரிக்கும் பாஜக

Former minister RB Udayakumar has accused O Panneer Selvam of acting with selfish interests

தொண்டர்கள் விசுவாசமாக இருக்க மாட்டார்கள்

எடப்பாடியாருக்கு மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் செல்வாக்கு இருப்பதால்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 93,802 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், ஆனால் நீங்கள் தொண்டர்கள்,  மக்கள் நம்பிக்கை பெறதாதால் 11,201 வாக்கு வித்தியாசத்தில் தான்வெற்றி பெற்றீர்கள்  234 சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடியார் சூறாவளி சுற்றுப் பயணம் செய்ததால் 33.29 வாக்கு சதவீதத்தை பெற்று தந்து அதிமுகவின் வாக்கு வங்கியை தக்க வைத்தார்.  இதில் அவருக்கு எந்த சுயநலமும் இல்லை, பொதுநலத்துடன் தான் செயல்பட்டார் என்பதற்கு சாட்சி, நான் ஓபிஎஸ் அவர்களை காயப்படுத்தற்காக சொல்லவில்லை, உண்மையை  தான்சொல்லுகிறேன், எடப்பாடியாரின் சீர்திருத்த முடிவுக்கு ஒன்னரை கோடி தொண்டர்கள் உள்ளனர். யாரையும் விலை பேசினாலும் அவர்கள் விசுவாச தொண்டர்களாக இருக்க மாட்டார்கள் நீங்கள் செய்யும் நடவடிக்கையால் வரலாறு உங்களை மன்னிக்காது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கொடநாடு கொலை வழக்கு..! செல்போன் பதிவுகள் கண்டறிய டிராய் ஒத்துழைப்பு அளிக்கவில்லை- தமிழக அரசு புகார்

Follow Us:
Download App:
  • android
  • ios