திருச்செந்தூர் கோயிலில் முகமது மடியில் அமரவைத்து பிராகரனுக்கு மொட்டை போட்ட சீமான்...
தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில் முடி காணிக்கை செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
திருச்செந்தூர் கோயிலில் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான், தமிழக மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர், விடுதலைபுலி தலைவர் பிரபாகரன் நினைவாக தனது மகனுக்கு மாவீரன் பிரபாகரன் என பெயர்சூட்டினார். இந்தநிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுவாமி மூலவர், சண்முகர், பரிவார தெய்வங்களை குடும்பத்தோடு தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு பக்தர்களோடு பக்தராய் அமர்ந்து முடி காணிக்கை செலுத்தினார். நாம் தமிழர் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளரான முகமது பாசில் மடியில் அமர வைத்து பிரபாகரன் மொட்டை அடித்துக் கொண்டார். இதனையடுத்து வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.தொடர்ந்து தனது மகனை அழைத்துச் சென்று திருச்செந்தூர் கடலில் புனித நீராடி விட்டு உறவினர்கள், நண்பர்களுடன் சீமான் சாமி தரிசனம் செய்தார்.
பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்...! 15 நாட்களில் இவ்வளவு வசூலா..??
மதுபானம் என்ன தீர்த்தமா..?
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பெயர் அளவில் மட்டுமே உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், கோயில்களில் தமிழ் வழிபாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ராகுல் காந்தியின் நடைபயணம் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுக்கும். ராகுல்காந்திக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும் என தெரிவித்தார். குஜராத் மாடல், டெல்லி மாடல் என்பதை போல் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள். திராவிட மாடல் என்று சொல்வதை விட தமிழ்மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்கஞ்சா, குட்கா, ஹெராயின், போன்றவை முருகன் ஆணையாக போதை பொருள்கள் என ஒத்துக் கொள்கிறேன் என தெரிவித்த சீமான், ஆனால் டாஸ்மார்க் மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்