பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்...! 15 நாட்களில் இவ்வளவு வசூலா..??
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும்,சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.15,63,030 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் குப்பை
சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 15 லட்சத்து 63 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும் அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 20 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை...! நா வடக்கத்துடன் பேச வேண்டும்- கே.பாலகிருஷ்ணன் அறிவுரை
15 நாட்களில் அபராதம் வசூல்??
மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 18.08.2022 முதல் 02.09.2022 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.8,39,520/ அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.6,25,810/ அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 211 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.97,700/- அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயும், அண்ணாநகரில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ருபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பொது உடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தூய்மையை பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்
எல்லையின்றி தொடரும் மணல் கொள்ளை... கண்டு கொள்ளாத திமுக அரசு...! அன்புமணி ஆவேசம்