Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி அச்சத்தில் உளரும் ஆர்.எஸ் பாரதி.! கைவைத்து பாருங்கள் வேதனைப் படுவீர்கள்- பாஜக

 அண்ணாமலை  மீது கை வைத்து பாருங்கள்.இன்னும் வேதனைப்படுவீர்கள். இந்த மிரட்டல்களையெல்லாம் வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள். வன்முறையை தூண்டுவதை விட்டு விடுங்கள் இல்லையேல் மேலும் வெட்கப்படுவீர்கள் என பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

BJP functionary Narayanan issued a warning to DMK organizational secretary RS Bharti
Author
First Published Sep 5, 2022, 12:12 PM IST

திமுக- பாஜக மோதல்

திமுக -பாஜக இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி மீது தினந்தோறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து வருகிறார். மின் வாரியத்தில் டெண்டர்  கொடுத்ததில் முறைகேடு, முதலமைச்சர் துபாய் பயணமா? குடும்ப பயணமா என விமர்சனம், கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதில் மோசடி, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆதரவு என பல்வேறு புகார்களை அண்ணாமலை தெரிவித்து வருகிறார். இதனை கண்டிக்கும் வகையில் திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தநிலையில் திருவாரூரில் உள்ள ஒரு தெருவிற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரை சூட்ட திமுக முடிவு எடுத்தது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக திருவாரூரில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கருணாநிதி பெயர் சூட்டும் திட்டம் செயல்படுத்தாமல் அமைதியானது.

அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை...! நா வடக்கத்துடன் பேச வேண்டும்- கே.பாலகிருஷ்ணன் அறிவுரை

BJP functionary Narayanan issued a warning to DMK organizational secretary RS Bharti

அண்ணாமலையை கண்டித்த ஆர்.எஸ் பாரதி

இந்தநிலையில் திருவாரூர் தெற்கு வீதியில் திராவிடர் கழகம் நடத்திய சனாதன எதிர்ப்பு திராவிட மாடல் விளக்க மாபெரும் மாநாடு திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பேசினார். மேலும் திருவாரூரில் தெற்கு வீதிக்கு கலைஞர் பெயர் சூட்டக்கூடாது என அண்ணாமலை பேசியிருக்கிறார். இந்த இடத்தில் அப்படி பேசிய அண்ணாமலை உதை வாங்காமல் போயிருக்கிறார் என்றால் அதனை நினைந்து வெட்கப்படுவதாக தெரிவித்திருந்தார். 

அச்சத்தில் உளறும் ஆர்.எஸ்.பாரதி

இந்தநிலையில் இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருவாருர் வீதியிலே வந்து கருணாநிதி பெயரை சூட்டக்கூடாது என்று சொல்லி விட்டு உதை வாங்காது போயிருக்கிறான் என்று சொன்னால் அதை கண்டு வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், இந்த மாநாடு அந்த உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பதாக கூறியுள்ளார். அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி, அச்சத்தில் உளறிகொட்டும் ஆர்எஸ் பாரதி அவர்களே, அண்ணாமலை  மீது கை வைத்து பாருங்கள்.இன்னும் வேதனைப்படுவீர்கள். இந்த மிரட்டல்களையெல்லாம் வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள். வன்முறையை தூண்டுவதை விட்டு விடுங்கள், இல்லையேல் மேலும் வெட்கப்படுவீர்கள் என பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்...! 15 நாட்களில் இவ்வளவு வசூலா..??

 

Follow Us:
Download App:
  • android
  • ios