திமுக பைல்ஸ் என்ற பெயரில் அண்ணாமலை அவதூறு கருத்து வெளியிட்டதாக டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை 14ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்ணாமலை மீது வழக்கு

தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14-ம் தேதி திமுக தலைவர்களின் சொத்து பட்டியல் என சில விவரங்களை வெளியிட்டார். திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 12 பேரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக அண்ணாமலைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். 

அடுத்த டார்கெட் அமைச்சர் சிவசங்கர்.. ஜூனியர் செந்தில் பாலாஜி - திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை

நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை பொது தளத்தில் இருக்கும் தகவல்களை தான் வெளியிட்டதாகவும், தவறாக எதுவும் கூறவில்லையென தெரிவித்தார். எனவே இந்த பிரச்சனையில் மன்னிப்பு கேட்க முடியாது சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள தயார் என கூறியிருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் டிஆர் பாலு ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்தி முன்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கூறியதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை 14ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியின் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது.? ஓமந்தூரார் மருத்துவமனை பரபரப்பு தகவல்