அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய ரத்த நாளங்களில் வலது புறத்தில் 90% அடைப்பும், இடது புறத்தில் 80 % அடைப்பும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும்  தற்போது நல்ல சுய நினைவோடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி

அதிமுக ஆட்சியில் அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று அதிகாலை அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலையை நேற்று பரிசோதித்த மருத்துவர்கள் ஆஞ்சியோ செய்தனர். அப்போது அவரது இருதய பகுதியில் 3 அடைப்புகள் இருப்பதாகவும் உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நீதிமன்றதில் செந்தில் பாலாஜியை ஆஜர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து நீதிபதி ஓமந்தூரார் மருத்துவமனைக்கே வந்து செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

செந்தில் பாலாஜி உடல் நிலை எப்படி உள்ளது.?

இதனையடுத்து புழல் சிறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி கொண்டு வந்துள்ளார். இந்தநிலையில் காவிரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான உத்தரவு இன்று காலை வெளியாகவுள்ளது. இதற்கிடையே தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி உடல் நிலை தொடர்பாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவோடு இருப்பதாகவும், மருத்துவர்களின் பரிந்துரைக்கும் உணவு மற்றும் மருத்துகளை எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜிக்கு இருதய ரத்த நாளங்களில் வலது புறத்தில் 90% அடைப்பும், இடது புறத்தில் 80 % அடைப்பும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்? மத்திய அரசு மருத்துவர்களின் அறிக்கையை நிராகரித்த அமலாக்கத்துறை?