திமுகவையே அலற விட்டுட்டோம் இல்ல! இடைத்தேர்தலை பொறுத்தவரை உண்மையான வெற்றி எங்களுக்கதான்!ஜெர்க் ஆகாத ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு திமுக உள்ளிட்ட கட்சிகள் பயந்தன. இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள். 

Real victory in the Erode by-election is ours.. Jayakumar

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் துஷ்பிரயோகம் செய்து ஆளும் கூட்டணி வெற்றி பெற்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 60 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இது தொடர்பாக சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி போலியான வெற்றி. இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் திமுக ரூ.400 கோடி செலவு செய்து போலியாக வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை நாங்கள் தான் உண்மையாக வெற்றி பெற்றுள்ளோம். 

இதையும் படிங்க;- அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லுமா? செல்லாதா? ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை.. பீதியில் இபிஎஸ்..!

Real victory in the Erode by-election is ours.. Jayakumar

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வாக்காளர்களை ஆடு, மாடுகளை போன்று அடைத்து அராஜகத்தில் ஈடுபட்டது திமுக. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் துஷ்பிரயோகம் செய்து ஆளும் கூட்டணி வெற்றி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது. இந்த இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு திமுக உள்ளிட்ட கட்சிகள் பயந்தன. இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள். 

இதையும் படிங்க;-  ஆணவம் பிடித்த இபிஎஸ் என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் மட்டுமே அதிமுக வளரும்! பண்ருட்டி ராமச்சந்திரன் விளாசல்.!

Real victory in the Erode by-election is ours.. Jayakumar

பணத்தை நம்பாமல் எங்களது சாதனைகளை கூறி நாங்கள் வாக்கு சேகரித்தோம். அதிமுகவை பொறுத்தவரை கட்சி எழுச்சியாகவே உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். சசிகலா எங்களை விட்டுவிட்டு, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios