ஆணவம் பிடித்த இபிஎஸ் என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் மட்டுமே அதிமுக வளரும்! பண்ருட்டி ராமச்சந்திரன் விளாசல்.!

எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுக தோல்வி. இரட்டை இலை சின்னம் கிடைத்தால் போதும் என்று இபிஎஸ் எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தோம். 

AIADMK will grow only if we throw out an individual called Edappadi Palanisamy.. Panruti Ramachandran

எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுக தோல்வி என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,922 வாக்குகள் மட்டுமே பெற்று சுமார் 66,575 வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகவின் தற்போதைய நிலை மிகுந்த வேதனையை அளிக்கிறது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரட்டை இலை சின்னத்தை வழங்கி அதிமுக தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்தார்கள். அந்த தீர்ப்பை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொண்டோம். ஆனால், அந்த தீர்ப்பின் படி இபிஎஸ் தரப்பினர் நடந்துகொள்ளவில்லை.

இதையும் படிங்க;- Erode East ByPoll: டெபாசிட் தொகையை தக்கவைத்த அதிமுக

AIADMK will grow only if we throw out an individual called Edappadi Palanisamy.. Panruti Ramachandran

ஈரோடு பகுதி எங்களின் கோட்டை என தம்பட்டம் அடித்துக்கொண்டவர்கள் அவர்களே, இந்த தேர்தலை முன்னிருந்து நடத்த ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால், ஓபிஎஸ் மற்றும் முன்னணி தலைவர்களை அலட்சியப்படுத்தினார்கள். இடைத்தேர்தலில் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறிய பிறகும் எங்களை அழைக்கவில்லை. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைத்தது ஆறுதலாக இருக்கிறது. தோல்விக்கு இபிஎஸ்.யின் ஆணவ போக்கே காரணம். எடப்பாடி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால் தான் அதிமுக வளர முடியும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து அதிமுக தோல்வி. இரட்டை இலை சின்னம் கிடைத்தால் போதும் என்று இபிஎஸ் எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தோம். 

இதையும் படிங்க;- ஈரோடு கிழக்கு இடத்தேர்தலில் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது… எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு!!

AIADMK will grow only if we throw out an individual called Edappadi Palanisamy.. Panruti Ramachandran

ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் மேலும் வளர வேண்டும் என்றால் ஒன்று சொல்கிறோம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. கழகத் தொண்டர்களும் ஆதரவாளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளார்கள், பொதுமக்கள் வாக்களிக்கவில்லை. அதுதான் இந்த நிலைக்கு காரணம். கழகத்தின் ஒற்றுமைக்கு யார் இடையூறாக இருந்தாலும் அவர்களை அனைவரையும் தொண்டர்கள் தூக்கி எறிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios