Erode East ByPoll: டெபாசிட் தொகையை தக்கவைத்த அதிமுக
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு தனது டெபாசிட் தொகையை தக்கவைத்துக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் தொடங்கி அனைத்து சுற்றுகளிலும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது சொந்த பகுதியில் கூட ஆளும் கட்சி வேட்பாளரை முந்தவில்லை. அந்த வகையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகள் பெற்று தனது டெபாசிட் தொகையை தக்கவைத்துக் கொண்டார்.
ஆளும் கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் சுமார் 1 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். தற்போதும் வாக்கு எண்ணும் பணியானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிமுக தனது வரலாற்றில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள நாஞ்சில் சம்பத், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி தனது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பைவிட்டு தார்மீகமாக விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.