அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லுமா? செல்லாதா? ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை.. பீதியில் இபிஎஸ்..!

ஜூலை 11ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

AIADMK general committee resolution case hearing today

கடந்த ஆண்டு  ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு கூட்டியது செல்லும் என தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க;- இன்னும் என்னுடைய ஆட்டம் முடியல.. சைலண்ட் மோடில் இருந்து கொண்டே இபிஎஸ்க்கு ஆப்பு வைக்கும் ஓபிஎஸ்?

AIADMK general committee resolution case hearing today

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கி அமர்வு பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் ஜூலை 11ல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிடவில்லை என்றும், சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமே முடிவெடுக்கும் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர்.

AIADMK general committee resolution case hearing today

இந்நிலையில், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் தன்னை கட்சியில் இருந்து நீக்கியும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  இபிஎஸ்ஐ ஓவர் டேக் செய்த ஓபிஎஸ்.. பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்..!

AIADMK general committee resolution case hearing today

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுக்குழுவை எதிர்த்த வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று முடிவு காணப்பட்டுள்ள நிலையில், தற்போது பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios