இபிஎஸ்ஐ ஓவர் டேக் செய்த ஓபிஎஸ்.. பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்..!
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் முறையிட திட்டமிட்டிருந்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஒரு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- இது காவிக் கட்சியின் சித்து விளையாட்டு.. பாஜகவை கிழித்து தொங்க விட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்..!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று கூறியதை அடுத்து அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இது ஓபிஎஸ் தரப்பை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் முறையிட திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்து கொண்ட ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதையும் படிங்க;- அதிமுக அழிவுக்கு இபிஎஸ்.யின் ஆணவம், அகங்காரமும் தான் காரணம்.. சும்மா இறங்கி அடித்த டிடிவி. தினகரன்..!
அதில், ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களையும், கட்சி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது. இந்த திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் அது நீதிக்கு அப்பாற்பட்டது. அது மட்டும் இன்றி என்னுடைய சட்டப்பூர்வமான உரிமையை பாதிக்கும். எனக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தும் என ஓபிஎஸ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.