இரட்டை இலை சின்னம் இருந்தும் இபிஎஸ் நாடாளுமன்ற, சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அதிமுக அழிவுக்கு காரணம் இபிஎஸ்யின் ஆணவம், அகங்காரமும் தான் காரணம். தேவர் நினைவிடத்திற்கு கூட வர முடியாத அளவிற்கு அரசியல் தவறால் அவரால் வர முடியவில்லை. அதிமுகவில் தற்போது உள்ளவர்கள் தொண்டர்கள் அல்ல; டெண்டர்கள்
நாடாளுமன்ற, சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைத்தே வெற்றி பெற முடியாத எடப்பாடி பழனிசாமி தனியாக நின்று வெற்றிபெற முடியுமா? என டிடிவி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- உச்சநீதிமன்றம் தீர்ப்பில் இந்த சுற்றில் இபிஎஸ் தற்காலிக வெற்றி பெற்றுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று கூறியுள்ளனர். தீர்மானத்தை பற்றி எதுவும் கூறவில்லை. நீதிமன்ற தீர்ப்பில் மேல் முறையீடு போகலாம். தேர்தல் ஆணையம் செல்லலாம். இந்த தீர்ப்பு தற்காலிகமான தீர்வு தான் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர் என அறிவித்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.

தவறானவர்கள் கையில் இரட்டை இலை சின்னம் உள்ளது. ஆட்சி அதிகாரம் இருந்தபோதே லட்சியத்திற்காக தொடங்கப்பட்டது அமமுக. வியாபாரநோக்கோடு லாபத்திற்காக எடப்பாடியுடன் சிலர் இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் அமமுக வளர்ந்துவரும் இயக்கமாக மாறியுள்ளது. இரட்டை இலை துரோகிகளின் கையில் இருந்ததால் திமுக வெற்றி பெற்றது. எடப்பாடி பழனிச்சாமி வெற்றி என்பது பண பலம், ஆட்சி அதிகாரம் இருந்தால் வந்துள்ளது. ஆட்சி பொறுப்பை வழங்கியிருந்தால் குப்பனோ சுப்பனோ இருந்தாலும் அதிகாரத்தில் இருந்திருக்கலாம்.
![]()
இரட்டை இலை சின்னம் இருந்தும் இபிஎஸ் நாடாளுமன்ற, சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அதிமுக அழிவுக்கு காரணம் இபிஎஸ்யின் ஆணவம், அகங்காரமும் தான் காரணம். தேவர் நினைவிடத்திற்கு கூட வர முடியாத அளவிற்கு அரசியல் தவறால் அவரால் வர முடியவில்லை. அதிமுகவில் தற்போது உள்ளவர்கள் தொண்டர்கள் அல்ல; டெண்டர்கள். எங்களுக்கு துரோகம் செய்ததால் ஒரு சிலரை பார்த்து அச்சம் இருக்கலாம். அதனால் தான் சேர்க்கமாட்டேன் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. வன்னியர் உள் இட ஒதுக்கீடு 10.5% அறிவித்து முறையாக நடைமுறைபடுத்த முடியாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். பாமக பழனிச்சாமியிடம் இருந்து நல்ல வேலையாக தப்பித்துவிட்டனர் வேண்டாம் என ஒதுங்கிவிட்டனர்.

துரோகம் தான் இபிஎஸ் மூலதனம். ஆட்சி அதிகார அகங்காரத்தால் பணத்தால் பழனிச்சாமி ஆட்டம் போடுகிறார். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு செயல்பட்டால் திமுக என்ற தீய சக்தியை வெல்ல முடியும். ஓர் அணியில் செயல்பட்டால் தான், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெல்ல முடியும். அனைவரும் ஒன்றிணைந்து எங்களோடு வருவார்கள். இபிஎஸ்அம்மாவின் தொண்டராக உணரவில்லை அகங்காரத்தில் குதிக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்காக நாங்கள் 40 சீட் கேட்டோம். ஆனால். இபிஎஸ் தவறான முடிவால் ஆட்சி பொறுப்பிற்கு வரமுடியவில்லை. இபிஎஸ் எப்போதும் திருந்துவதாக தெரியவதில்லை என டிடிவி. தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
