மூக்கு உடைபட்டாலும் மருந்து போட்டுக்கொண்டு கோவை தொகுதியில் போட்டியிடுவேன் - கமல்ஹாசன்
கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் பணியாற்ற 40 ஆயிரம்பேரை தயார் செய்தால் கோவை தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கோவை கொடிசியா அருகே உள்ள நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இந்த கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு? மாணவர்கள் அதிர்ச்சி
இந்நிலையில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்திலில் நாம் வெற்றி பெறவேண்டும் என்றால், ஒவ்வொரு சட்டமன்ற தெகுதிக்கும் 6 ஆயிரம் பணியாளர்கள் வீதம் நமக்கு தேவை. அதன்படி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் தேர்தல் பணியாற்ற 40 ஆயிரம் பேரை தயார் செய்தால் மீண்டும் கோவையில் போட்டியிடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், எனக்கு மூக்கு உடைத்தால் பரவாயில்லை. மருந்து போட்டு வந்து, மீண்டும் கோவையில் நிற்கிறேன். விக்ரம் படத்திற்கு கூட்டம் சேர்கிறது, நமது கட்சிக்கு கூட்டம் சேராதா? சனாதனம் என்ற ஒரு வார்த்தையை சொன்னதற்காக இவ்வளவு பெரிய பிரச்சினையை உருவாக்குகிறார்கள். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார்.
கடன் தொல்லையால் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு; பரிதவிப்பில் பச்சிளம் குழந்தைகள்
திமுகவோ, வேறு எந்த தனிப்பட்ட கட்சியோ பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது. பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும். இந்தி ஒழிக என கூறவில்லை, தமிழ் வாழ்க என கூறுகிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம். அன்பு ஒன்று தான் எனக்கு தெரிந்த மதம் என்றார்.