பென்னாகரம் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு? மாணவர்கள் அதிர்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Complaint that human waste was mixed in the water tank of a government school in Dharmapuri district vel

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனை குளம் அரசு நடுநிலைப் பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ள சின்டெக்ஸ் டேங்க் குடிநீர் தொட்டியில் இன்று காலை துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர் கணேசன் தொட்டியை ஆய்வு செய்தார். அப்பொழுது அந்தத் தொட்டியில் மலம் கலந்து உள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்தத் தொட்டி சுத்தப்படுத்தப்பட்டது. இது குறித்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பாப்பாரப்பட்டி காவல் துறையினர் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆம்பூரில் துப்புரவு தொழிலாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - காவல் துறையினர் விசாரணை

மனித கழிவு கலக்கப்பட்டதா? அல்லது குரங்கு உள்ளிட்ட வேறு ஏதேனும் விலங்குகளின் கழிவு கலக்கப்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்து துர்நாற்றம் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios