கடன் தொல்லையால் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு; பரிதவிப்பில் பச்சிளம் குழந்தைகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் விருத்திக்காக வாங்கப்பட்ட கடனை திருப்ப செலுத்த முடியாத நிலையில், கணவன், மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தட்டான்விளை பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 30). மர வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ரூபா (28). இவர்களுக்கு 3 வயதில் மகளும், 1½ வயதில் மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரவீனுக்கு மர வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அதை ஈடுசெய்யவும், வியாபாரத்தை விரிவு படுத்தவும் கடன் வாங்கியுள்ளார்.
அந்த வகையில் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் கடனை செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பிரவீன், தன் மனைவி ரூபாவுக்கும் தென்னைக்கு வைக்கும் பூச்சி மருந்தை கொடுத்து குடிக்க சொல்லி விட்டு தானும் அதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவு? மாணவர்கள் அதிர்ச்சி
சிறிது நேரத்தில் ரூபா மயங்கியதால் பிரவீன், தன் மனைவி இறந்து விட்டார் என்று நினைத்து கதறி அழுதுள்ளார். மேலும் அப்பகுதியினரிடமும் இது குறித்து கூறியதால், இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரூபா நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரவீனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிரவீனும் பரிதாபமாக உயிரிழந்தார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்காக ஆட்சியர் அலுவலகத்தை அலறவிட்ட மாணவர்கள்
கடன் பிரச்சினையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.