Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்..! இரட்டை வேடம் போடும் திமுக..? ஆர் பி உதயகுமார் விமர்சனம்

ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றி, அதை நடைமுறை படுத்தாமல் இரட்டை நிலையை கடைப்பிடித்து, இளைஞர்கள் எதிர்காலத்தை திமுக அரசு மூழ்கடிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

RB Udayakumar has criticized the DMK government for playing a double role in the online gambling issue
Author
First Published Nov 20, 2022, 11:03 AM IST

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்

ஆன் லைன் சூதாட்டம் தடை சட்டத்தை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டு மிகப்பெரிய சமூகக் கொடுமை,சமூக சீரழிவு என்பதை அரசே ஒப்புக்கொண்டு விட்ட நிலையில்  ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயம் தானா ?

என்று இன்றைக்கு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிற இந்த ஆன்லைன் சூதாட்டத்தால், பாதிக்கப்பட்ட அனைவரும் இன்றைக்கு இந்த கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கிறார். எந்த நோக்கத்திற்காக ஆன்லைன் சூதாட்டத்தை தடை சட்ட அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்று வகையில், தமிழக அரசு உடனே இன்றே அதை நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது- பாஜகவை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலின்

ஆன்லைன் சூதாட்டம் 30 பேர் தற்கொலை

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதலை பெற்று, அது உடனே நடைமுறைக்கு கொண்டுவர இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதையும், இன்றைக்கு மக்கள் எதிர்பார்த்து கவலையோடு காத்திருக்கிறார்கள். திமுகஅரசு பொறுப்பேற்று முதல் 30 பேர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் இன்றைக்கு இது குறித்து என்ன நிலைமை அதைத்தான் நாம் இன்றைக்கு விவாதிக்கின்றோம். மக்களிடம் கேட்கப்பட்ட அடிப்படையிலே 10,735 மின்னஞ்சல்புகார்கள் வந்துள்ளன.  விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று 10,708 புகார் வலியுறுத்தப்பட்டதாகவும் அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 2 லட்சம் ஆசியரிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் ,ஆன்லைனில் 67% கண்பார்வையிலே குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது என்றும், அந்த அறிவிப்பு அவருடைய கவனம் திறமைகள் 75% குறைந்து இருக்கிறது திறமை குறைந்திருக்கிறது என அந்த விசாரணையிலே தெரிவித்திருக்கிறது. 

ஒரே மாதத்தில் அமித் ஷா மீது இபிஎஸ்க்கு கோபம் ஏன்.? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய பரபரப்பு தகவல்

ஆன்லைன் விளையாட்டு- ஆளுநர் ஒப்புதல்

அரசு தாக்கல் செய்த தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2022, தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2022 கொண்டு வரப்படுகிறது இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.  இதன் பெயரில் இந்த சட்ட உடனடியாக அமுலுக்குவருகிறது என்றும் ஆன்லைன் விளையாட்டை கண்காணிப்பது, வங்கிகளுக்கு தெரியாமல் பணப்பரிவர்த்தனை செய்வது ஆகியவை அடங்கும், ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைக்கப்படுகிறது என்றும் அரசு குறிப்பிலே அந்த செய்தி குறிப்பிலே அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் .

பட்டப்பகலில் தலைநகரில் காவல் நிலையம் எதிரே படுகொலை! தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!இபிஎஸ் விளாசல்

திமுக இரட்டை நிலை

இந்த சட்டத்தினுடைய வலிமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேண்டும் இந்த அரசு விழப்புணர்வு செய்கிறதா அல்லது நாடகம் இன்றைக்கு நடத்துகிறதா இந்த அரசு சட்டத்தை இயற்றிய ஒரு புறத்தில் நாங்கள் சட்டத்தை ஏற்றுகிறோம்.  ஒரு புறத்தில் நீங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று இந்த அரசு இன்றைக்கு இரட்டை நிலை இரட்டை நிலையை பார்க்கிற போது வேதனைதான் எஞ்சியிருக்கிறது . ஆன்லைன் சூதாட்டத்தை  உண்மையாகவே தடை செய்து ஆன்லைன் சூதாட்டத்தை உண்மையாகவே ரத்து செய்து இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாத்து தந்திட இந்த அரசு முன்வருமா என்பதை எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை முதலமைச்சர் செயல்படுத்த வேண்டும் என ஆர் பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

மங்களூரில் ஆட்டோ வெடித்தது விபத்து அல்ல..! தீவிரவாத தாக்குதல்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி

Follow Us:
Download App:
  • android
  • ios