மங்களூரில் ஆட்டோ வெடித்தது விபத்து அல்ல..! தீவிரவாத தாக்குதல்..! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கர்நாடக டிஜிபி
கோவையில் கார் குண்டு விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் சாலையில் சென்ற ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த சம்பவம் திட்டமிட்ட சதி என கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.
மங்களூரில் ஆட்டோ வெடித்தது
கோவை மாவட்டம் உக்கடத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி காரில் இருந்த மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் காரில் இருந்து குண்டு, பாஸ்ராஸ், ஆணி போன்றவை கைப்பற்றப்பட்டது.இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து தீவிர விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை தற்போது என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் சந்தேகத்திர்குரிய நபர்களிட் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே மாதத்தில் அமித் ஷா மீது இபிஎஸ்க்கு கோபம் ஏன்.? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறிய பரபரப்பு தகவல்
இரண்டு பேர் காயம்
இந்தநிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்றுள்ளது. நேற்று மாலை நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென வெடித்து சிதறியது. அப்போது ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.
இதனையடுத்து அந்த இரண்டு பேரை மீட்ட அப்பகுதியில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. எனவே வெடிபொருட்களை குக்கரில் வைத்து கொண்டு செல்லப்பட்டிருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மங்களூரில் தீவிரவாத தாக்குதல்
இந்தநிலையில் இந்த ஆட்டோ வெடி விபத்து சம்பவம் திட்டமிட்ட சதி என கர்நாடக மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். ஆட்டோவில் ஏற்பட்ட வெடி விபத்து தீவிரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல, ஆனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பயங்கரவாத செயல் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய ஏஜென்சிகளும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து விபத்து..? இரண்டு பேர் காயம்..! சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை