இன்று தபால் வாக்கு எண்ணிக்கை.. நேற்று ஆட்சியருடன் திமுக ரகசிய சந்திப்பு.. பகீர் தகவலை வெளியிட்ட அதிமுக..!
இன்று நடக்கும் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் சாதகமாக மாற்ற முயற்சிக்கும் இந்த செயல் சட்ட விரதோமானது, ஜனநாயகத்திற்கு எதிரான இச்செயல் பெரும் கண்டணத்திற்கு உரியது.
தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் இன்று மீண்டும் எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் ரகசியமாக ஆட்சியரை சந்தித்ததாக அதிமுகவை சேர்ந்த ராஜ் சத்யன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பழனி நாடார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வமோகன் தாஸ் பாண்டியன் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிங்க;- உள்நோயாளியாக வைத்து Billஐ தீட்டுவது தான் காவேரி மருத்துவமனை வழக்கமா? செந்தில்பாலாஜிக்கு எதிராக சீறும் ஷியாம்
அதில், தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் மிக குறைவாக இருப்பதாகவும், தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை. சில வாக்குகள் எண்ணப்படாமலே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். ஆகையால், வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 5ம் தேதி வெளியானது. அதில், தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்து இருப்பது உறுதியாகியுள்ளது. ஆகையால், தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். தென்காசி மாவட்ட ஆட்சியர் 10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், வழக்கு செலவில் ரூ.10,000 வழக்கு தொடர்ந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க;- ஒரு நாள் போதும் முதல்வரே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்.! இதை எதிர்பார்க்கல !!
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்கு எண்ணிக்கை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதனிடையே, தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுக்கு சாதகமாக செயல்படுமாறு கூறியுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தென்காசி தெற்கு கழக மாவட்ட செயலாளர் அண்ணன் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில், தென்காசி சட்டமன்ற தொகுதியின் தபால் ஓட்டுகளை ஆட்சியர் முன்னிலையில் இன்று (11/07/2023) எண்ணுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு திமுகவின் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் மற்றும் காங்கிரஸ் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் என்பவரும் நேற்று மாலை தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசியதாக செய்திகள் வருகிறது, அப்படி நடந்திருந்தால் இந்த சந்திப்பிற்காண அவசியம் என்ன?
இன்று நடக்கும் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் சாதகமாக மாற்ற முயற்சிக்கும் இந்த செயல் சட்ட விரதோமானது, ஜனநாயகத்திற்கு எதிரான இச்செயல் பெரும் கண்டணத்திற்கு உரியது. இன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கையில் நீதிமன்ற மேற்பார்வையும் அவசியமாகிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- தென்காசி எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து? தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!