உள்நோயாளியாக வைத்து Billஐ தீட்டுவது தான் காவேரி மருத்துவமனை வழக்கமா? செந்தில்பாலாஜிக்கு எதிராக சீறும் ஷியாம்
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் சீராக நடந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகும் ஒரு மாதம் உள்நோயாளியாக வைத்து Bill ஐ தீட்டி அனுப்புவது தான் காவேரி மருத்துவமனை வழக்கமா என ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு 4 இடங்களில் அடைப்பு இருப்பதை அடுத்து பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர்.
இதையும் படிங்க;- தூக்கமின்றி தவிக்கும் அமைச்சர்கள்!செந்தில் பாலாஜி மட்டும் வாய் திறந்தால் ஸ்டாலின் இருப்பது கோட்டை அல்ல! இபிஎஸ்
இதனையடுத்து, உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து சென்னை காவேரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றி ஜூன் 21ம் தேதி பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- பெண்களின் ஆயுதமே மௌனம் தான்; 2024 தேர்தலில் அது எதிரொலிக்கும் - திமுகவுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான கேள்விகள் எழுந்து வருகிறது.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- காவேரி மருத்துவமனையில் சீராக நடந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகும் ஒரு மாதம் உள்நோயாளியாக வைத்து Billஐ தீட்டி அனுப்புவது தான் காவேரி மருத்துவமனை வழக்கமா? இல்லை அரசுப் பணத்தில் செந்தில்பாலாஜி திருடனுக்கு மட்டும் சிறப்புச் சிகிச்சையா? என ஷியாம் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.