Asianet News TamilAsianet News Tamil

GST: உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி.. ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் - கொதிக்கும் அன்புமணி ராமதாஸ்

GST: நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஓட்டல் அறை வாடகை உள்ளிட்ட சேவைகளுக்கான வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு 12 சதவிகிதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. 

Pmk president anbumani ramadoss against 5 percentage gst on food items
Author
First Published Jun 29, 2022, 12:08 PM IST

ஜிஎஸ்டி வரி

கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி அமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூடி முடிவெடுக்கும். அந்த வகையில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று தொடங்கியது. அதில், அனைத்து மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர். 

Pmk president anbumani ramadoss against 5 percentage gst on food items

உணவு பொருட்களுக்கு வரி

கூட்டத்தில், சில பொருட்கள் மீதான வரி விகிதத்தை மாற்றி அமைப்பது, சில பொருட்களுக்கான வரி விலக்கை ரத்துசெய்வது, ஆகியவை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஓட்டல் அறை வாடகை உள்ளிட்ட சேவைகளுக்கான வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு 12 சதவிகிதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. 

நாள் ஒன்றிற்கு ஐயாயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட மருத்துவமனை அறை வாடகைக்கு 5 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. அஞ்சல் அட்டை, உள்நாட்டு கடிதம், புக் போஸ்ட் ஆகியவற்றை தவிர, அனைத்து அஞ்சலக சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : MGR : ஒற்றை தலைமை விவகாரம் - அன்றே கணித்த எம்.ஜி.ஆர்.. தீர்வு இதுதான் !!

இதையும் படிங்க : AIADMK: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் நீக்கம்..இபிஎஸ் தரப்புக்கு திகில் காட்டிய ஓபிஎஸ் தரப்பு

அன்புமணி ராமதாஸ் 

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிக்கிறது. தொழில்நுட்பமும், நாகரிகமும் அதிகரித்து விட்ட நிலையில் குக்கிராமங்களில் கூட வணிக முத்திரையற்ற உணவுப் பொருட்கள் பொட்டலத்தில் அடைக்கப்பட்டு தான் விற்கப்படுகின்றன.

அவற்றுக்கு 5% வரி விதிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் பணவீக்கம் ஏற்கனவே உச்சத்தில் உள்ளது.  இத்தகைய சூழலில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், பிற அத்தியாவசியத் தேவைகளுக்கும் வரி விதிக்கப்பட்டால் அது பணவீக்கமும், அதன் விளைவாக விலைவாசியும் கடுமையாக அதிகரிக்கும்.

மக்கள் பாதிக்கப்படுவார்கள். மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கக் கூடாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்

இதையும் படிங்க : AIADMK: எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவும் வைத்திலிங்கம்? ஓபிஎஸ் அதிர்ச்சி !

Follow Us:
Download App:
  • android
  • ios