Asianet News TamilAsianet News Tamil

“டீக்கடைக்காரர் முதல் இந்திய பிரதமர் வரை” - பிரதமர் மோடியை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்.!

குஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பிஜேபியில் அடிப்படை உறுப்பினாராக சேர்ந்து,தற்போது இந்தியாவின் பிரதமராக வளர்ந்து இருக்கிறார் நம் இந்திய நாட்டின் பிரதமர்.

PM Narendra Modi Birthday Personal life and biography political career
Author
First Published Sep 16, 2022, 8:16 PM IST

1950 செப்டம்பர் 17ல் குஜராத்தில் உள்ள மேஹ்சானா மாவட்டத்தில் அமைந்துள்ள வத்நகரில் தாமோதர் தாஸ் முல்சந் மோதி-ஹீராபேன் இணையருக்கு  மகனாக பிறந்தார் நரேந்திர மோடி. மொத்தம் உள்ள 6 மகன்களில் 3வதாக பிறந்தார் மோடி. சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே ஆவார். 

இவர் வறுமையில் வாழும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். சிறுவயதிலேயே குஜராத்தின் தேநீர் கடைகளில் வேலை பார்த்தார். பிறகு பெரும் வளர்ச்சி அடைந்து ஒரு தலைவராக ஆனார். தான் வறுமையில் போராடிய குஜராத்துக்கே முதலமைச்சாராக வந்து 12 ஆண்டுகள் குஜராத்தை ஆட்சி செய்தார்.

இதையும் படிங்க;- “விவசாயிகளின் நண்பன்.. நலத்திட்டங்கள் மூலம் உயரவைத்த பிரதமர் மோடி” - என்ன செய்தார் தெரியுமா ?
 

PM Narendra Modi Birthday Personal life and biography political career

பிரதமர் மோடி வறுமையான குடும்பத்தை சேர்ந்த இவர் தனது சிறுவயதில் இருந்தே வட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்று வந்தார். பிறகு தனது சகோதரனுடன் சேர்ந்து ஒரு பேருந்து நிலையம் அருகே தனது தேநீர் கடையை துவங்கினார். 1967 ஆம் ஆண்டு தனது பள்ளி படிப்பை முடிந்த மோடி, வீட்டை விட்டு வெளியேறி இந்தியாவின் விரிவான நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை ஆராய்வதற்காக ரிஷிகேஷ், இமயமலை மற்றும் வடக்கிழக்கு இந்தியா ஆகிய இடங்களுக்கு சென்றார்.

இதையும் படிங்க;- PM Modi 72nd Birthday: பிரதமர் மோடியின் பாபுலர் திட்டங்கள் என்னென்ன? அவற்றின் வெற்றிப் பாதைகள் ஒரு பார்வை!!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வீடு திரும்பிய மோடி ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) 1971 ஆம் ஆண்டு சேர்ந்தார். ஆர் எஸ் எஸ் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் பணியில் சேர இவர் அகமதாபாத் சென்றார். இவர் 1978ல் தொலைத்தூர கல்வி மூலம் தில்லி பல்கலைகழகத்தில் அரசியலில் அறிவியல் பட்டம் பெற்றார். 1983ல் குஜராத் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியலில் (பொலிட்டிக்கல் சயின்ஸ்) முதுகலை பட்டம் பெற்றார்.

1985ல் பாஜகவில் உறுப்பினராக இருந்த இவர் 1987 ஆம் ஆண்டு பாஜக குஜராத் பிரிவின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் கலந்துக்கொண்டு அதில் பி.ஜே.பி க்கு வெற்றியை பெற்று தந்தார். அதுவே பி.ஜே.பிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். 1990ல் அத்வானியின் அயோத்தி ரத் யாத்திரைக்கு இவர் உதவினார். பிறகு இவருடைய புகழை கட்சிக்குள்ளேயே பேச துவங்கினர். அதன் பிறகு தேசிய அளவிலான அரசியல் வேலைகள் அவருக்கு வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  pm narendra modi birthday:பிரதமர் மோடியின் வெற்றிப் பயணம் ! டீ கடை டூ டெல்லி கோட்டை வரை! ஸ்வாரஸ்ய பார்வை

PM Narendra Modi Birthday Personal life and biography political career

2001,அக்டோபர் 7இல் குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார்.நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். பிப்ரவரி 27, 2002ம் ஆண்டு நடந்த 'கோத்ரா ரயில் எரிப்பு' சம்பவத்தின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியமைத்தார். பின்னர் 2007,2012 ஆகிய தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று 4வது முறையாகவும் குஜராத் முதல்வர் ஆக பதவியேற்று,திறம்பட செயலாற்றினார். 

நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தார் நரேந்திர மோடி.குஜராத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மோடி அவரது ஆட்சி காலத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்ததாக கூறப்படுகிறது. 2006 – ‘’இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது.

இதையும் படிங்க;-  pm gifts auction: பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200 பரிசுப் பொருட்கள் 17ம்தேதி ஏலம்: என்னென்ன தெரியுமா?

PM Narendra Modi Birthday Personal life and biography political career

2009 ஆம் ஆண்டு ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.2012இல் 'டைம்’ பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதிகளில்’ ஒருவராக சித்தரிக்கப்பட்டார். நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றது. 

இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் நடந்த ஆட்சியை வீழ்த்தி 534 தொகுதிகளில் 282 ல் வெற்றி பெற்றது. பிறகு பிரதமராக பதவியேற்ற அவர், அடுத்து வந்த தேர்தலிலும் தொடர்ந்து தற்போது வரை இந்திய நாட்டின் பிரதமராக இருக்கிறார்.ஸ்வச் பாரத்”, மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா,தூய்மை கங்கா, டிஜிட்டல் இந்தியா என பலவித திட்டங்களை மக்களுக்காக உருவாக்கினார். 

அண்டை நாடுகளுடனான இந்திய உறவை வலுப்படுத்தவும் உலகின் பிற நாடுகளோடும் இந்தியாவோடு நட்பை மேம்படுத்திகொள்வதற்காக அதிக முயற்சிகளை செய்தார். இதற்காக பல நாடுகளுக்கு அவ்வபோது பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு..உடலுறவு கொள்வதில் பிரச்னை.. 8 ஆண்டுகள் கழித்து கணவன் ஒரு பெண் என அறிந்த மனைவி !

Follow Us:
Download App:
  • android
  • ios