Asianet News TamilAsianet News Tamil

கடலில் பேனா வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும்... அன்புமணி ராமதாஸ் கருத்து!!

கடலில் பேனா வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

pen memorial in the sea will affect the environment says anbumani ramadoss
Author
First Published Feb 2, 2023, 6:33 PM IST

கடலில் பேனா வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அண்ணா சதுக்கம் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் விருப்பப்பட்டார். அதனால்தான், மெரினா கடற்கரையில் எதையும் செயல்படுத்தக் கூடாது என்ற பாமக தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றோம்.

இதையும் படிங்க: பாஜக போட்டியிட்டாலும் வேட்பாளரை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்.!

அதன் பிறகுதான், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடல் என்பதில் சுற்றுச்சூழல் தொடர்பான பல பிரச்சினைகள் உள்ளன. எனவே, கருணாநிதி நினைவிடத்தில் பேனாவை வைக்கலாம் என்பது எங்களது கோரிக்கையாகும். கடலில் பேனா வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். பல சின்னங்கள் வைக்கப்பட்டு கடல் நாசப்படுத்தப்படும். கடலில் பேனா வைப்பது என்பது முன் உதாரணமாக இருக்கக் கூடாது.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி கலவரம்... திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது, யாருக்கும் ஆதரவு இல்லை என எங்களது நிலைபாட்டை தெளிவாக தெரிவித்துவிட்டோம். இடைத்தேர்தல் தேவையில்லாது. நீர் மேலாண்மை, விவசாயம் என மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு நேரத்தை செலவிடுகிறோம். மற்ற கட்சிகள், இடைத்தேர்தலுக்கு சுற்றி வருகின்றனர். அமைச்சர்கள் சுற்றி வர போகிறார்கள். தமிழகத்தின் நிர்வாகம் ஒரு மாதத்துக்கு ஸ்தம்பிக்க போகிறது என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios